தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை - எர்டோகன் » Sri Lanka Muslim

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை – எர்டோகன்

turk

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி எர்டோகன் கூறும்போது, “தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக இதுவரை நான் அறிந்ததில்லை. சவுதி மற்றும் அதன் கூட்டு நாடுகள் கத்தார் மீது சுமத்தியுள்ள குற்றச்சா ட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றார்

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளது.

ஆனால் சவுதி மாற்று அரபு நாடுகளின் இந்த முடிவை துருக்கி ஜனாதிபதி ஆரம்பம் முதலே விமர்சித்து வந்துடன் கத்தாருடனான துருக்கியின் உறவு தொடரும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka