துண்டிக்கப்பட்ட கரத்தை கணுக்காலில் பொருத்தி உயிருடன் பேணிய மருத்துவர்கள் - Sri Lanka Muslim

துண்டிக்கப்பட்ட கரத்தை கணுக்காலில் பொருத்தி உயிருடன் பேணிய மருத்துவர்கள்

Contributors

விபத்தொன்றின் துண்டிக்கப்பட்ட நபரொருவர் கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி வைத்திருந்து ஒரு மாத காலமாக பாதுகாத்த பின்னர் அதனை வெற்றிகரமாக அவரது இழந்த கரப் பகுதியுடன் மீண்டும் இணைத்து சீன மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஹுனால் மாகாணத்தில் ????? நகரிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ஸியவோ வெயி என்ற மேற்படி நபரின் வலது கரம் அவரது பணியிடத்தில் இயந்திரமொன்றில் சிக்கி துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சக தொழிலாளர்கள் அவரை இயந்திரப் பகுதியிலிருந்து விடுவித்து அவரது துண்டிக்கப்பட்ட கரம் சகிதம் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஸியவோ வெயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது கரப்பகுதி உயிருடன் இருந்த போதும் அவருக்கு ஏற்பட்டிருந்த கடும் காயம் காரணமாக அதனை மீளவும் அவருக்கு உடனடியாக பொருத்துவது சாத்தியமற்று இருந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் பிராந்தியத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

இதனையடுத்து விபத்து இடம்பெற்ற 7 மணித்தியாலங்களில் ??? சங்ஷா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸியவோ வெயிக்கு அறுவைச்சிசிக்கையை மேற்கொண்ட மருத்துவர்கள் அவரது துண்டிக்கப்பட்ட கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி அது இறந்து விடாது காப்பாற்றினர்.

இந்நிலையில் ஒரு மாதம் கழித்து அவரது துண்டிக்கப்பட்ட பகுதியிலான இரத்த ஓட்டம் சீராகியதும் கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த கரம் மீளவும் அதற்குரிய இடத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. (virekaseri)

Web Design by Srilanka Muslims Web Team