துபாயில் செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்தவருக்கு 06 மாத சிறை » Sri Lanka Muslim

துபாயில் செல்போனில் பெண்ணை வீடியோ எடுத்தவருக்கு 06 மாத சிறை

photo2

Contributors
author image

World News Editorial Team

துபாயில் பெண் ஒருவர் உடை மாற்றுவதை செல்போனில் வீடியோ எடுத்த இந்தியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

அவரது பெயர் பி.ஜே. என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தவர் 23 வயதான இந்தியர் பி.ஜே. அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு அலுவலகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

 

அப்போது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் 32 வயது பெண் ஒருவர் ஓய்வறையில் உடை மாற்றியுள்ளார். அந்த பெண் உடை மாற்றுவதை பி.ஜே. தனது செல்போனில் வீடியோ எடுத்து சிக்கினார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பி.ஜே.வை கைது செய்தனர். விசாரணையில் பி.ஜே. தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

 

இந்நிலையில் இது குறித்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பி.ஜே.வுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் தண்டனை காலம் முடிந்த பிறகு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka