துபாயில் 79-மாடிக் குடியிருப்பில் தீ விபத்து » Sri Lanka Muslim

துபாயில் 79-மாடிக் குடியிருப்பில் தீ விபத்து

dubai

Contributors
author image

BBC

துபாய் மரினாப் பகுதியிலுள்ள ‘டார்ச் டவரின்’ 50ஆவது மாடியில் ஏற்பட்ட அந்தத் தீ, விரைவாக அந்தக் கட்டிடத்தின் பல பகுதிகளுக்கு பரவியது என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

 

எனினும் அந்தத் தீ, அவரச உதவிப் பணியாளர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.

 

இந்தத் தீ விபத்து குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. அதில் தீ மேல் நோக்கி பரவுவதும் கட்டிடத்தின் சிதிலங்கள் நிலத்தில் விழுவது தெரிகிறது.

 

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் 79 மாடிகள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் குடியிருப்புப் பகுதி திறந்து வைக்கப்பட்டது.

 

தீ விபத்து ஏற்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு 300 மீட்டர்களுக்கும் கூடுதலான உயரம் கொண்டது.

Web Design by The Design Lanka