துபாய் ஆட்சியாளரின் மகள் சிறையில் துன்புருத்தப்படுவதாக கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பு..! - Sri Lanka Muslim

துபாய் ஆட்சியாளரின் மகள் சிறையில் துன்புருத்தப்படுவதாக கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பு..!

Contributors

தான் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனவும் டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மதுவின் மகள் ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டுபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருமான ஷேக் முகம்மதுவிற்கு பல மனைவிகள் உள்ளனர். அவர்களில் ஒரு மனைவிக்குப் பிறந்த மகளான ஷேக்கா லத்தீபா, கடந்த 2018 மார்ச் மாதம் டுபாயில் இருந்து கடல் வழியாக தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.

இந்தியாவுக்கு வர முயன்ற அவரை இந்திய கடலோர காவற்படை உதவியுடன் ஷேக் முகம்மதுவின் பாதுகாப்பு படையினர் வழிமறித்து பிடித்தனர்.பின்னர் டுபாய் அல் அவயர் மத்திய சிறையில் தான் 3 மாதங்கள் அடைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சிறையாக மாற்றப்பட்ட வில்லா ஒன்றில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும் ஷேக்கா லத்தீபா கூறும் செல்போன் வீடியோ காட்சிகளை பிரபல சர்வதேச ஊடக நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team