தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு - Sri Lanka Muslim

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Contributors

திருகோணமலை, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இன்று (21) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) என்ற பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் மற்றும் தாயுடன் குறித்த பெண் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே, குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா ?தற்கொலையா? எனபது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-திருகோணமலை நிருபர் கீத்-

Web Design by Srilanka Muslims Web Team