தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை ஹன்சியா றஊஃப் ராஜினாமா! » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியை ஹன்சியா றஊஃப் ராஜினாமா!

prof hansiya

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்களின் பாரபட்சமான நடவடிக்கையின் காரணமாக அப்பல்கலைக்கழத்தின் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கான நிலையத்தின் இயக்குணர் பேராசிரியை ஹன்சியா றஊப் அவர்கள் 22.01.2018 இலிருந்து செயற்படாவண்ணம் திடீரென இராஜினாமா செய்துள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது:

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம் நாஜிம் அவர்கள் 2015ஆம் ஆண்டு பதவியேற்றவேளையில் தான் இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த இடத்திலிருந்து மேலும் முன்னேற்றிச் செல்லப் போவதாகவும் தான் இப்பல்கலைக்கழகத்தில் ஒரு முறை மாத்திரம்தான் உபவேந்தராகக் கடமையாற்றவிருப்பதாகவும் கூறியிந்தார். ஆனால்  அவரது சமகாலப் போக்கானது மீண்டும் ஒருமுறை உபவேந்தர் பதவிக்கும் விண்ணப்பிக்கும் நோக்கைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாக இப்பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியை ஹன்சியா றஊப் அவர்களது இந்த இராஜினாமா காணப்படுகின்றது.

கடந்த ஒன்றரை வருடகாலமாக இந்தப் பணிப்பாளர் பதவியிலிருந்த போது இந்நிலையத்தின் முகாமைக்கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்குச் சந்திப்பதற்கோ அல்லது தனிப்பட்ட தொழில் நிமித்தமாக சந்திப்புக்களுக்கோ இவ்வுபவேந்தர் தொலைபேசி அழைப்புமூலமோ அல்லது குறுஞ்செய்தி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ அனுமதியளித்திருந்ததாகவும் தான் இந்த முறை உபவேந்தர் பதவிக்கு விண்ணக்கப் போவதாக அறிந்தவுடன் தற்போதைய உபவேந்தர் இந்தப் பணிப்பாளர் பதவிக்குட்பட்ட இந்நிலையத்தின் செயற்பாடுகளைக்கூட செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் ஆகக்குறைந்தது சந்திப்பதற்கான வாய்ப்பினைக்கூட வழங்காமலும் பல்கலைக்கழகத்தில் இல்லாமலிருப்பதாகவும் கடைசியாக நடைபெற்ற பல்கலைக்கழக மூதவையில் இவ்வுபவேந்தர்மீது சரமாரியான காட்டம் காட்டிவிட்டு இவ்வியக்குனர்ர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியின்மீது அக்கறையுள்ள பலரையும் இந்நிறுவனத்தின் வளர்ச்சியையும் பாதிப்படையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

பல்கலைக் கழகக் கற்றோர் சங்கமும் நலன் விரும்பிகளும்

Hansiya01

 Hansiya02

Hansiya03

Web Design by The Design Lanka