தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிரான சூழ்ச்சி முறியடிப்பு - தென்கிழக்கு கற்றோர் சங்கம் » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிரான சூழ்ச்சி முறியடிப்பு – தென்கிழக்கு கற்றோர் சங்கம்

naajim6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிரான சூழ்ச்சி முறியடிப்பு. உபவேந்தர் வெற்றி! பல்கலைக்கழக சமூகம் களிப்பில்.
தென்கிழக்கு கற்றோர் சங்கம்-


பல்கலைக்கழகத்தின் இவ்வருடத்துக்கான முதலாவது ஆழுகை சபை 27.01.2018 அன்று கூடியபோது அந்த ஆழுகை சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படாத நிகழ்வான அடுத்து வரும் காலத்திற்குரிய உபவேந்தருக்கான தெரிவுக்குரிய விளம்பரப்படுத்தல் விடயம் திட்டமிட்ட அடிப்படையில்  கொண்டுவரப்பட்டு அது அன்று தோல்வியில் முடிவடைந்தது.

அதனை அடுத்து பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு (TASEU) கூட்டப்பட்டு இது விடயம் சம்பந்தமாக முடிவெடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துக்கு ஆழுகை சபையின் நிகழ்ச்சி நிரலில் தலையிடும் அதிகாரம் இல்லை என்றபோதிலும், அதிலுள்ள குறிப்பிட்ட சிலரின் சுயநலம் காரணமாக கூட்டப்பட்டு 07.01.2018 அன்றுக்கு முதல் மீண்டும் ஆழுகை சபை கூட்டப்படவேண்டும் என்றும் அதில் அடுத்து வரும் காலத்திற்குரிய உபவேந்தருக்கான தெரிவுக்குரிய விளம்பரப்படுத்தல் விடயம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அதற்காக ஆழுகை சபையின் குறிப்பிட்ட உறுப்பினர்களிடம் கையெழுத்தும் வாங்கி உபவேந்தருக்கு அனுப்பியிருந்ததாக பல்கலைக்கழக வட்டாரம் தெரிவித்தது.

அது மட்டுமல்லாமல் இப் பல்கலைக்கழகத்தில்  குற்றம் புரிந்துள்ள 08 பேர் கொண்ட குழுவினர் அம்பாரையிலுள்ள அமைச்சர் தயா கமகே அவர்களையும் சந்தித்து ஆழுகை சபையை கூட்டித்தருமாறும், புதிய உபவேந்தருக்குரிய சகல நடைமுறைகளையும் செய்து தருமாறும் வேண்டியுள்ளனர். இங்கு அமைச்சரைச் சந்திக்கச் சென்ற குழுவினர்தான் அவ் அமைச்சரை ஒரு இனவாதி என தங்கள் முக நூல்களில் விமர்சித்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு முறனான விடயம். அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதனை உறுதிப்படுத்துமுகமாக இன்று உபவேந்தரினால் ஆழுகைசபை உறுப்பினர்களுக்கும் பதிவாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் கடிதம் சுட்டிக் காட்டுகின்றதாக பல்கலைக்கழக வட்டாரம் மூலம் அறியக் கிடைக்கிறது. அதனடிப்படையில் ஆளுகை சபை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினதும் அமைச்சினதும் பரிந்துரைக்கமைவாகவே சட்ட ரீதியாக கூட்டப்படும் எனவும் சதிகார கூட்டத்தினால் ஆழுகைசபையை கூட்ட முடியாது எனவும் ஆழுகை சபை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இந்த நிகழ்வானது பல்கலைக்கழத்தினை குழப்பிக்கொண்டிருக்கும் குளுவினருக்கு பலத்த பின்னடைவோடு தோல்வியுமாகும். ஆரம்பத்திலேயே நாம் முன்னெடுத்த விடயம் தோல்வியடைந்து விட்டது எனவும் உபவேந்தர் வென்று விட்டார் எனவும் ஒருவித மன உளைச்சலில் உள்ளதாக உள்ளக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆரம்பமே தோல்வி என்ற படியால் மீண்டும் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்கள்தான் மீண்டும் உபவேந்தராக வருவார் என  தகவல்கள் கூறுகின்றன.

இதனை உறுதிப்படுத்திக் கொள்ளுமுகமாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, எல்லாமே சட்ட வரையறைக்குள்தான் நடைபெறும் எனவும், ஆளுகை சபை என்பது பல்கலைக்கழகத்தின் உச்ச இடம் எனவும் அதனை யாரும் சுயநலனுக்காக பிழையாக வழி நடாத்த இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். தனது ஒவ்வொரு  நடவடிக்கையும் பல்கலைக்கழகத்தின் உயர்ச்சிக்காகவும் அதனது நலனுக்காகவும் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் (TASEU) ஒரு சிலர் நாளைய தினம் ஊடகத்திற்கு தங்களது ஆதங்கத்தையும் இயலாத்தனத்தையும் கூறவுள்ளதாக தகவல் கசிய வந்துள்ளது. அதில் உபவேந்தரை எப்படியாவது பிழையாக சித்தரிக்க வேண்டும் என அதன் தலைவரை குருனாகலையை சேர்ந்த விரிவுரையாளர் கேட்டுக்கொண்டதாக அறியக்கிடைக்கிறது.

     

Web Design by The Design Lanka