தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நாஜிமிற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு! » Sri Lanka Muslim

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நாஜிமிற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு!

naajim6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம். எம். எம். நாஜிம் ஆவார். இவர் இப்பல்கலைக்கழகத்திற்கு இந்தப் பதவியைப் பெற்று வந்தபோது இங்குள்ள பலரும் இவரது காலத்தில் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களது காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான அபிவிருத்திகள் தொடரப்படுகின்ற அதே வேளையில் இப்பல்கலைக் கழகமானது கல்விசார் ரீதியில் இன்னும் மிளிரும் என்றும் நாட்டில் காணப்படுகின்ற முன்னணிப் பல்கலைக்கழகங்களை முந்திச் செல்லும் என்றும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் உண்மையில் நடைபெற்றது இதற்கு மாற்றமாகவே அமைந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பேராசிரியர் நாஜிம் அவர்கள் தனது பதவிக்காவும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இப்பல்கலைக்கழக உயர் மட்ட உத்தியோகத்தர்களைப் பிழையாக வழிநடாத்தியும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிரூபங்களை மீறியும் செய்ய முற்படுகின்ற நியமனங்கள் பதவியுயர்வுகள் மூலம் தனக்கு வருகின்ற பிரச்சினைகளை தனக்குப் பின்னர் வரும் நிர்வாகத்தினருக்குச் சாட்டிவிட்டுச் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றவருகின்றதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்ழகத்தின் தற்போதைய உபவேந்தர் அவர்களின் முறையீனமான நிர்வாக நடைமுறைகள் தொடர்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தாலும் அவரால் புரியப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நிர்வாக நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்கள் தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இப்பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களில் ஒருவரும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஒருவருமான இலங்கைத் திட்டமிடல் சேவையைச் சேர்ந்த ஒருவர் CA/Writ/ 35/2018 ம் இலக்கத்தில் ஒரு வழக்கைத் தொடுத்துள்ளார். அவ்வழக்கில் குறிப்பிட்ட மனுதாரர் பின்வரும் விடயங்களை சுட்க்காட்டியுள்ளார்.

01.    தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழிநுட்ப பீடத்திற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத் துறையில் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வவதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் 2016ம் ஆண்டு கோரப்பட்டுள்ளது. அவ்விளம்பரத்தின் மீது அப்பல்கலைக்கழத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் கடமையாற்றிய கனணிப் போதனாசிரியர் (Computer Instructor) ஒருவர் விண்ணப்பித்திருந்தார்;.

இவ்விண்ணப்பதாரி தமது அடிப்படைத் தகைமையாக கனணி விஞ்ஞானத்தில் இரண்டாம் நிலை கீழ்வகுப்புச் (Second class lower division) சித்தியொன்றைப் பெற்று அதனைத் தகைமையாக் கொண்டே கனணிப் பிரிவில் போதனாசிரியராக சுமார் இரண்டரை வருடங்கள் குறித்த பல்கலைக்ககழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் விஞ்ஞான பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராக மூன்று வருடங்கள் கடமையாற்றியிருந்தார்.

இவர் விஞ்ஞான முதுமானிப்பட்டத்தை ஒரு நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுள்ளார். இத்தகைமையை வைத்துக் கொண்டே இவர் தொழிநுட்ப பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் தொடப்பட்டுள்ள குறித்த வழக்கில் இந்நியமனம் பின்வரும் காரணங்களினால் சட்டத்திற்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

1.    பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் 721 மற்றும் 996ம் இலக்க சுற்று நிரூபங்களினடிப்படையில் சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமாயின் அவர் நியமிக்கப்படுகின்ற துறையில் முதுமானிப் பட்டத்தையும் குறைந்தது 06 வருடங்கள் பல்கலைக்கழ மட்டத்தில் ஆசிரியராக அல்லது தொழில்சார் நிபுனராக கடமையாற்றியிருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதனாசிரியர் பதவியொன்றை வகிக்கும் நபர் பல்கலைக்கழக நிர்வாக நடைமுறையில் அவர் ஆற்றும் கடமை ஆசிரியர் சேவையாகக் கருதப்படாது. அவர் ஆசிரிய உதவியாளர் (Academic Supporter) ஆகவே கொள்ளப்படுவார். இவர்கள் மேற்கொள்ளும் கடமைக்காலம் கற்பித்தல் அநுபவமாகக் கொள்ளபடப்டமாட்டாது. ஆனால் குறித்த போதனாசிரியரின் சேவைக்காலம் உபவேந்தரின் தற்றுனிபின் அடிப்படையில் ஆசிரிய சேவைக்காலமாகக் கணிப்படப்பட்டு அவருக்கு சிரேஸ்ட விரிவுரையாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்ட ஏற்பாடுகளுக்கு மரனானது என மனுதாரர் குறிப்பிடுகின்றார்.

மேலும் இந்த நேர்முகப் பரீட்சையை ஒரு முகாமைத்துவ விரிவுரையாளர் ஒருவரை வைத்து நடாத்தப்பட்டுள்ளது. Computer Science படித்தவரை ஒரு Management விரிவுரையாளர் எவ்வாறு பாடரீதியில் பரீட்சித்தார் என்பது பகடியாகவேயுள்ளது.

2.    ஒரு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நியமிப்புச் செய்யப்படும் நேர்முகப் பரீட்டைச்குழு எவ்வாறு அமையப்பெற வேண்டும் என பல்கலைக்கழக நியமிப்பு நடைமுறைச் சட்டம் 198 மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அச்சட்டத்தின் பிரகாரம் ஒரு நேர்முகப் பரீட்டைச குழுவில் பல்கலைக்கழக உபவேந்தர், குறித்த பீடத்திற்கான பீடாதிபதி, துறைத்தலைவர், பல்கலைக்கழக மூதவையினால் நியமிக்கப்படுகின்ற பாடாத்துறை நிபுணர் ஒருவர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் இரு உறுப்பினர்கள் ஆகியோரை அக்குழு கொண்டிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நியமணத்திற்கான நேர்முகப் பரீட்சைக் குழுவில்; கொழும்பு கணிணிப் பாடசாலையிலிருந்து 198ம் இலக்க நியமிப்பு நடைமுறைச் சட்டத்திற்குப் புறம்பாக மேலதிகமாக ஒருவர் உபவேந்தரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு முறையீனமான செயற்பாடுகளினால் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ள சிரேஸ்ட விரிவுரையாளர் பதவி சட்டத்திற்குப் புறம்பாக உபவேந்தர் எடுத்த தனிப்பட்ட முயற்சியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை மீறி வழங்கப்பட்டுள்ளது என மனுதாரர் குறிப்பிடுகின்றார்.

02.    தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் 2017.11.27ம் திகதியன்று கலை மற்றும் கலாசராபீடத்தில் பொருளியல் பாடத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு விரிவுரையாளரை நியமிப்புச் செய்துள்ளார். இவரது நியமயனத்தில் 35 மணித்தியாலத்திக்கும் குறையாமல் தாங்கள் விரிவுரைகள் நடாத்த வேண்டும் எனவும் அதற்காக ரூபா 1,25,000 மாதாந்தம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்ட காலம் பல்கலைக்கழகத்தில் விடுமுறைக் காலமாகக் காணப்படுவதாக பல்கலைக்கழக விரிவுரை நாட்காட்டி குறிப்பிடுகின்றது. இக்காலத்தில் குறித்த விரிவுரையாளர் எவ்வித விரிவுரைகளும் நிகழ்த்தாமல் ஊதியம் வழங்குவதற்கு முயற்சித்ததன் மூலம் அரச பணத்தைத் உபவேந்தர் துஸ்பிரயோகம் செய்துள்ளார் என குறிப்பிட்ட வழக்கில் மனுதாரரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
03.    கலைக் கலைகலாச்சார பீடத்தில் பொருளியல் பாடத்துறைக்கு நிரந்தர விரிவுரையாளர நியமிப்பதற்கு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளம்பரங்கள் கோரப்பட்டு தமக்குத் தேவையானவர் ஒருவர் விண்ணப்பிக்காத காரணத்தினால் அவ்விண்ணப்பங்களை வேண்டுமென்றே காலதாமதப்படுத்தி செயழிலக்கச் செய்தமை மூலம் அரசாங்கப் பணம் நிர்வாகத் திறமையின்மையினால் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவ்வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

04.    இப்பல்கலைக்கழகத்தினால்; அண்மையில் சட்டபிரிவுக்கான சிரேஸ்ட உதவிப் பதிவாளர் விண்ணப்பம் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தது. இவ்விளம்பரத்தில் விண்ணப்பதாரியின் வயதெல்லை 45 ஐ தாண்டியிருக்க கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிபந்தனையினால் 45 வயதைத் தாண்டியிருந்த பல சட்டத்தரணிகள் இந்த வாய்ப்பிணை இழந்திருந்தனர். ஆனால் தென்கிழக்குப் பல்கலைகழக நிர்வாகம் விளம்பர நிபந்தனையை மீறி அந்த வாய்ப்பினை ஒருவருக்கு வழங்கியிருந்தது. அந்த நபர் குறித்த விண்ணப்பம் முடிவுத்திகதியன்று 46 வயதையும் 03மாதங்களையும் கடந்திருந்த நிலையில் அவரை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்து அவருக்கு குறித்த சிரேஸ்ட உதவிப் பதிவாளர் பதவியை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உபவேந்தர் சிபாரிசுக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அது ஏனைய விண்ணப்பதாரிகளின் அடிப்படை உரிமையை மீறுகின்ற செயற்பாடாகும் எனவும் அவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை உபவேந்தரின் நிர்வாக ரீதியான அறிவின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்

05.    பொதுவாக பல்கலைக்கழக உப – வேந்தர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் அலுவலக வாகனத்திற்கான எரிபொருள்கள் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 13/2015ம் இலக்க சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சுற்று நிரூபத்தின் பிரகாரம் ஒரு உபவேந்தர் மாதமொன்றுக்கு 170 லீட்டர் எரிபொருளை பாவிப்பதற்கு உரித்துடையவர் ஆனால் தென்கிழக்குப் பல்கலைக்கழக தற்போதய உபவேந்தர் பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழுவின் சுற்றுநிரூபங்களை மீறும் வகையில் கொழும்புக்கு கூட்டத்திற்குச் சென்றேன் எனக் குறிப்பிட்டு பல்கலைக்கழக ஆளுகை சபையை பிழையாக வழிநடாத்தி மேலதிகமாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக 135 லீற்றர் எரிபொருள் பாவனையை மேற்கொண்டதுடன் தமது சொந்த வேலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தியுள்ளதுடன் அதற்காக தமது வாகனச் சாரதிக்கும் மேலதிக கொடுப்பனவு வழங்கச் சிபாரிசு செய்துள்ளார். இத்தகைய செயற்பாடுகளுக் இவரிடம் எவ்விதமான ஆதராங்களும் இல்லை என்பதுடன் அவற்றை சமர்ப்பிக்காமலே பல்கலைக்கழக ஆளுகை சபையை பிழையாக வழிடாத்தியுள்ளார். எனவும் ஒரு விடயம் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது.

06.    அதுபோல் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உடற்கல்விப் பணிப்பாளருக்கான விண்ணப்மொன்றையும் கோரியிருந்தது. அந்த விளம்பரத்திலும் ஒரு தவறான நடவடிக்கையினை மேற்கொண்டு தமக்குச் சாதகமான தகுதியற்ற ஒருவருக்கு அப்பதவியை வழங்குவதற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழ உபவேந்தர் முயற்சித்து வருவதாகவும் ஒரு விடயம் மனுதாரால் நீதிமன்றுக்கு எத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவவாறாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போதைய உபவேந்தரால் புரியப்பட்ட தாகக் கருதப்படும் பல்வேறு நிர்வாகத் திறமையின்மைகளை உள்ளடக்கியதாக இவ்வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் கலாநிதி உதுமாலெப்பை அலி சக்கி என்ற சட்டத்தரணியினால் தொடரப்பட்டுள்ளது. அதில் தற்போதைய உபவேந்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறும் குறித்த விடயங்களை கேள்விக்குட்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. அவ்வழக்கை விசாரித்த கௌரவ மேன்முறையீட்டு தலைமை நீதிபதி நீதியரசர் பத்மன் சூரசேன உள்ளிட்ட நீதிபதிகள் தென்கிழக்குப் பல்கலைக்கழக தற்பொதைய உப – வேந்தர் பேராசிரியர். எம. எம். எம். நாஜீம் அவர்கள் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வருகின்ற 2018.03.20ம் திகதி நீதிமன்றில் தோன்றுமாறு கட்டளையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(இக்கட்டுரைக்கு எமது இணையம் பொறுப்பல்ல. இக்கட்டுரை தொடர்பில் மறுப்பு கட்டுரைகள் எமக்கு கிடைக்குமாயின் அதனை நாம் பிரசுரம் செய்வோம்.)

Web Design by The Design Lanka