தென்கிழக்கு அலகும் தேவையில்லை கரையோர மாவட்டமும் தேவையில்லை - பேராசிரியர் றமீஸ் அப்துல்லா » Sri Lanka Muslim

தென்கிழக்கு அலகும் தேவையில்லை கரையோர மாவட்டமும் தேவையில்லை – பேராசிரியர் றமீஸ் அப்துல்லா

ramees-abthulla

Contributors
author image

P.M.M.A.காதர்

நமக்குள்ளே இருக்கின்ற பிரதேச வாதங்களை ஒழிப்பதற்கு சமூக சிந்தனையாளர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் சமூக மன்றங்கள் ஒன்றுபட்டு செயற்பட்டால் நமக்கு தென்கிழக்கு அலகும் தேவையில்லை கரையோர மாவட்டமும் தேவையில்லை என பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த கவிஞர் டொக்டர் எஸ்.நஜமுதீன் எழுதிய கவிதைகளின் தொகுப்பான’இமைகள் மூடவிடாதிருக்கும்’கவிதை நூல்வெளியீட்டு விழா அண்மையில் சாய்ந்தமருது சீபிறீச் மண்டபத்தில் தமிழ் மருதமாமணி ஏ.பீர்முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.இங்கு சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-நமக்குள்ளே இருக்கின்ற மிகப்பெரிய கொடுமையான நோய் இருக்கின்றது நமக்கு அரசியல் ஒரு பிரச்சினையில்லை நமக்கு அதிகாரம் ஒரு பிரச்சினையில்லை நமக்குள்ளே இருக்கின்ற பிரதேச வாதம்தான் நமக்குள்ளே இருக்கின்ற பெரிய பிரச்சினையாகும் அந்தப் பிரதேசவாதத்திற்குள்ளளேதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு நல்ல சிந்தனையாளன் டொக்டர் நஜிமுதீனைப் பார்த்து இவர் சமூகத்தை வழிகெடுக்கக்;கூடியவர்; அதிகாரத்தை சுறுட்டிக் கொண்டு ஓடுபவர்; என்று யாரும்;

நினைக்கமாட்டார்கள்,சொல்லமாட்டார்கள்.அவர் ஒரு நேர்மையான சிந்தனையாளன். நேர்மையான சிந்தனையாளன் இந்த சமூகத்தில் வாழ முடியாது.நமக்குள்ளே வாழ்கின்ற பிரதேசவாதம் நரகமாகும்.

இதைத்தான் நஜ்முதீன் ‘பாம்புகள் விற்கிற பூக்காறி’ என்ற கவிதையிலே மிகவும் அழகாகச் சொல்லுகின்றார்.அது மிகவும் அற்புதமான கவிதை.இந்த சமூகத்திற்குள்ளே வாழ்வது மிகவும் கஷ்டம்.பிரதேச வாதம் என்கின்ற இந்த நோய் என்று ஒழியுமோ அன்றுதான் இந்த சமூகத்திற்கு விடிவு வரும் என்று நான் நினைக்கின்றேன்.

இவ்வாறான பிரதேச வாதங்களை ஒழிப்பதற்கு சமூக சிந்தனையாளர்கள்,பள்ளிவாசல் நிருவாகிகள் சமூக மன்றங்கள் ஒன்றுபட்டு இந்த பிரதேச வாதத்தை ஒழிக்க முடியுமென்றால் நமக்கு தென்கிழக்கு அலகும் தேவையில்லை கரையோர மாவட்டமும் தேவையில்லை.எனத் தெரிவித்தார்.

லக்ஸ்டோ மீடியா நெட்வேக்கின் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றது.

Web Design by The Design Lanka