தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று ; இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை..! » Sri Lanka Muslim

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று ; இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை..!

FB_IMG_1602562588999

Contributors
author image

Editorial Team

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலின் காரணமாக, அம்மாணவர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தியதனால், இப்பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை தன்மை இல்லை என அறியமுடிகின்றது.

மேலும் காய்ச்சலின் காரணமாக, ஏற்படுத்தப்பட்டுள்ள PCR பரிசோதனையின் முடிவுகள் வரும் வரைக்கும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் உட்பிரவேசிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இம்மாணவர்களுக்கு கொரோனா தொற்று இன்னும் ஊர்ஜிதம் செய்யப்படாத நிலையில், பல்கலைக்கழகம் கொரோனாவினால் மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்க விரும்புகின்றோம்.

மேலும் இந்த பிசிஆர் முடிவுகள் வந்ததன் பிறகே பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதா? அல்லது அதனை தற்காலிகமாக மூடி வைப்பதா என்பது பற்றி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிக்கும் எனவும் அறியமுடிகின்றது.

Web Design by The Design Lanka