தென் சூடானில் இலங்கையருக்கு சொந்தமான உணவகம் மீது தாக்குதல் - Sri Lanka Muslim

தென் சூடானில் இலங்கையருக்கு சொந்தமான உணவகம் மீது தாக்குதல்

Contributors

தென் சூடானில் ஏற்பட்டுள்ள மோதல்களில் இலங்கை பிரஜை ஒருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அந்த உணவகத்தில் பணியாற்றிய மூன்று பேர் கடந்த 31 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அங்குள்ள மேலும் 12 பேர் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் பணிகளை உகண்டாவில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த மேலும் 40 பேர் தென் சூடான் விமான நிலையத்திலும் அங்குள்ள ஹோட்டல்களிலும் தங்கியுள்ளனர்.அதேவேளை தென் சூடானுக்கு சென்ற சிலர் சட்டவிரோதமாகவே அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.(lw)

Web Design by Srilanka Muslims Web Team