தெரண 360 நிகழ்ச்சி மூலம் வில்பத்து பிரச்சினையை சிங்களவர்களிடம் பேசிய சரித்திர நாயகன் » Sri Lanka Muslim

தெரண 360 நிகழ்ச்சி மூலம் வில்பத்து பிரச்சினையை சிங்களவர்களிடம் பேசிய சரித்திர நாயகன்

ri

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(நியாஸ் கலந்தர்)


வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முக்கிய வகிபாகம் வகித்து இன்று வரை சளைக்காமல் போராடும் முஸ்லிம் அரசியல் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்று பெருமையுடன் கூறமுடியும்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வில்பத்து ஜீவராசி பிரகடனம் முன்மொழியப்பட்டது. இந்த பிரகடனம் மூலம் வடக்கு முஸ்லிம்கள் தங்களது பூர்வீக இடங்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. வடபுல மக்களை மீள் குடியமர்த்த வேண்டும் என இரவு,பகல் பாராது தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்திருக்கும் ஓர் அரசியல் தலைவனாக அமைச்சர் றிஷாட்டை வடபுல முஸ்லிம்கள் காண்கின்றனர்.

பேரினவாதிகளின் தொடர்ச்சியான சவால்களுக்கு முகம் கொடுக்கும் பல தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் கலந்து தற்துணிவுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இதன் ஓர் அங்கமாக நேற்றைய தினம் தெரன தொலைக்காட்சியில் “360” என்ற நிகழ்ச்சியில் பேரினவாதிகள் ஒன்றினைந்து அமைச்சர் றிஷாட் பதியுதீனை வில்பத்து பிரச்சினையில் இருந்து தூரமாக்க வேண்டும் என்ற முனைப்போடு நேரலையில் கேட்கும் அனைத்து பாதகர கேள்விகளுக்கும் விடையளித்து தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

வில்பத்து எனும் போது பார்வையாளராக அல்லது மழைக்கு முளைக்கும் காளான் போல் வடக்கிற்குசென்று புகைப்படம் எடுத்து ஊடகங்களுக்கு செய்தி வழங்குபவர்கள் போல் அல்லாமல் அனைத்து எதிர்ப்புகளையும் சந்தித்து,சாதிக்கும் முஸ்லிம் தலைவன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் என்பதை நேற்றைய தினம் நிரூபித்திருந்தார்.

பூனையை கண்டால் எலி தன் உயிரை கையில் எடுத்து ஓடி மறைந்துகொள்வதை போன்றே முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் வில்பத்து எனும் சொல் கேட்டால் ஊமையாகி,மறைந்து விடுகிறார். 

ஒரு சமூகத்தின் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத முகா தலைவர் ரவூப் ஹக்கீம், தன்னை தேசியத் தலைமை எனக் கூறுவதற்கு வெட்க படவேண்டும். சிங்கள மொழி மூலம் கல்வி கற்று சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்ரஸ் தலைவர் சிங்கள மொழி மூலமான தொலைக்காட்சி நேரடி அரசியல் கலந்துரையாடலில் கலந்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக விவாதம் செய்ய முடியுமா??இது உங்களுக்கான வடபுல மக்களின் சவாலாக இருக்கிறது. உங்களால் முடிந்தால் செய்து காட்டுங்கள்.

நேற்று நடைபெற்ற தெரண தொலைக்காட்சியின் 360 என்ற நிகழ்ச்சி மூலம் வில்பத்து சம்பந்தமாக பெரும்பான்மை மக்களிடையே இருந்த தவறான எண்ணம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது சேறு பூச நினைக்கும் பேரினவாதிகளுக்கும், சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் குறித்த நிகழ்ச்சி நெத்தியடியாக அமைந்திருந்தது.

வில்பத்து பிரச்சினை தனிமனித போராட்டமல்ல. முஸ்லிம் சமூகத்தின் வாழ்விட போராட்டம் என நினைத்து இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றினைந்து வடபுல மக்களின் கண்ணீரை துடைக்க முன்வர வேண்டும்.

Web Design by The Design Lanka