தெற்கே செல்லும் வாகனங்களிடம் கப்பம் அறவிடும் காட்டு யானைகள் - Sri Lanka Muslim

தெற்கே செல்லும் வாகனங்களிடம் கப்பம் அறவிடும் காட்டு யானைகள்

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

தென் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் இப்போது காட்டு யானைகளுக்கு கப்பம் கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் புத்தல – கதிர்காமம் வீதியில் பயணிக்கும் பெரிய பஸ்களை மறித்து உணவு கேட்கும் யானைகளுக்கு அவ்வாறு உணவு வழங்காவிட்டால் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தன. இதனால் சுமார் 15 க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்திருந்தன. இது தொடர்பில் நான் முன்னர் முகநூலில் தகவல் தந்திருந்தேன்.

 

ஆனால், இப்போது சிறிய ரக வாகனங்களைக் கூட இந்தக் காட்டு யானைகள் விட்டு வைக்காமல் அவற்றினையும் வழிமறித்து உணவு கேட்கின்றன. இது ஒரு வகையில் கப்பமாகவும் இருக்கலாம் அல்லவா?

 

படம் 01: சிறிய ரக வேனைக் கண்டு காட்டுக்குள்ளிலிருந்து வரும் யானை.

 

படம் 02: வான் மறிக்கப்பட்டதால் உணவு கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் மனிதர்கள்.

 

படம் 03 : கப்பமாக உணவைப் பெற்றுக் கொண்ட யானை வேனுக்கு வழி விட்டு ஒதுங்கும் காட்சி.

 

aliya1

 

aliya1.jpg2

 

aliya1.jpg2.jpg3

படங்கள் : நன்றி நெத் எப்.எம்

Web Design by Srilanka Muslims Web Team