தெவனகலை நிலப்பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி - Sri Lanka Muslim

தெவனகலை நிலப்பிரச்சினை தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி

Contributors

 

-அபு-அஹமத்-

தெவனகலை நிலப்பிரச்சினை தொடர்பில் புதிய திருப்பம்

எதிர்வரும் 23ஆம் திகதி நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு மதில் நாட்டு வேலைகள் நடைபெற இருந்த நிலையில், அது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்நிகழ்வை தற்காலிகமாக அரசு பிற்போட்டிருந்தது.

எனினும் இதனை சிறுபான்மை சமூகம் இரகசியமாக பேணிவந்த நிலையில் அதனை தெவனகலையை பாதுகாக்கும் பொது வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் இயங்கி வந்த அந்நிய துவேச சக்திகள் அறிந்து கொண்டு அதனை அவர்களாகவே நிறுத்துமாறு கோரியும் அந்தவிடயத்தில் அவர்கள் தோல்வியுற்றார்கள் என்பதனை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு இப்பிரச்சினையை பொது பல சேனா அமைப்பிடம் ஒப்படைப்பதாகவும் உத்தியோக பூர்வமாக இன்று சுவரொட்டி ஒன்றின் மூலம் அப்பிரதேசத்தில் உள்ள துவேச எண்ணக்கருக்களைக் கொண்டவர்களை சமாளிக்கும் வகையில் வெளியிட்டிருந்தது.

உண்மையில் தெவனகலை பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் அல்லாது அவர்களது திட்டத்தின் கீழ் இன்னும் உரிமை கொண்டாட இருக்கின்ற இன்னும் 39 இடங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றே கூற வேண்டும்.

அத்தோடு இதற்காக போராடுகின்ற மாவனல்லை தெவனகலை பிரதேச அனைத்து முஸ்லிம்களும் தொடர்ந்து உறுதியோடு நின்று போராட வேண்டும் எனபதோடு, இதனை சட்ட ரீதியான ஒரு தீர்வை நோக்கி நகர்த்த வேண்டும் என அனைவரும் எதிர்ப்பார்கின்றனர்.

இதற்காக அனைத்துலக முஸ்லிம்களும் அவர்களுக்காக பிராத்தனை புரியுமாறு அன்போடு வேண்டப்படுகின்றனர்.

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team