தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி: 30, 000 தொன் கொப்பறா இறக்குமதி செய்ய முடிவு - Sri Lanka Muslim

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி: 30, 000 தொன் கொப்பறா இறக்குமதி செய்ய முடிவு

Contributors

ஆசியாவில் அதிக தேங்காயை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் இப்போது தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் தென்னந் தோட்டங்கள் பிரித்து விற்கப்படுவதே இதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.

தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் பிஸ்கட் உற்பத்தியாளர்களுக்கும் உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்வோருக்கும் உதவும் முகமாக அரசாங்கம் கொப்பறாவை இறக்குமதி செய்யமுடிவெடுத்துள்ளது.

அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் வரை நோய்த்தாக்கம் அற்றதாக உறுதிப்படு த்தப்பட்ட 30 ஆயிரம் தொன் கொப்பறா இறக்குமதி செய்யப்படும். இவற்றை இறக்குமதி செய்பவர்கள் செஸ் வரி, வட் வரி உட்பட துறைமுக விமான நிலைய கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.

கமநல சேவைத்திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகார சபை ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து தேவை ஏற்படும் போது கொப்பறாவை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கவுள்ளன. கொப்பறா உற்பத்தியின் மூலம் உள்ளூர் கைத்தொழில் பாதிக்காத வகையில் இதனை செயற்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.(tk)

Web Design by Srilanka Muslims Web Team