தேசத்தின் பேசு பொருள்களில்: தேங்காய் » Sri Lanka Muslim

தேசத்தின் பேசு பொருள்களில்: தேங்காய்

coconut6

Contributors
author image

M.M.A.Samad

இற்றைக்கு இரு வருடங்களுக்கு முன்னர் நிலவிய குடும்;ப ஆட்சிக்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உருவாக்கப்பட்ட இக்கூட்டாச்சிக்குமிடையில் ஒப்பீட்டளவில் பாரிய வேறுபாட்டைக் காண முடியாதுள்ளதாக இந்நாட்டின் மத்திய தர மக்கள் தற்போது முனுமுனுக்க ஆரம்பித்திருக்கிறார்கள.; இதனால்,; காட்சி மாறினாலும் காணம் மாறவில்லை என அம்மக்கள் கூறுவதைக் கேட்க முடிகிறது.

இம்மக்களின் முனுமுனுப்புக்கு காரணமில்லாமலுமில்லை. ஏனெனில,; கடந்த ஆட்சியில் பெரும்தொகை நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் இந்நாட்டின்மீது பெரும் கடன் சுமையைச் திணிக்கச் செய்து பொருளாதார நிதி நெருக்கடிக்குள் தள்ளிய மட்டுமல்லாது, மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்து, பலரைக் கடனாளிகளாக்கி வாழ்வாதார நெருக்கடியை உண்டாக்கியது. இதனால்,; கடந்த ஆட்சியாளர்களின் ஆட்சியானது சமூக மட்டத்திலுள்ள மத்திய தர வர்க்கத்தினரை வெகுவாகப் பாதித்தமை வெளிப்படை.

மக்கள் மீது திணிக்கப்ப்பட்ட பொருளாதார நெருக்கடியும், சிறுபான்மை மக்கள் மீது பேரினவாத கடும்போக்காளர்களைக் கொண்ட அமைப்புக்கள் மேற்கொன்ட இனவாத நெருக்கடிகளும் இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற உணர்வை ஆட்சி மாற்றத்தை விரும்பி மக்களிடையே வேரூண்டச் செய்தது. அந்தவகையில,; மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வெற்றி வரலாற்றில் இலங்கையில் 2015 ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் ஒன்றெனெக் கருதலாம்.

ஆட்சி மாற்றத்தினூடாக நிம்மதியாக வாழ வேண்டும் என்றே மக்கள் நம்பினர். ஆனால், கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட இக்கூட்டாச்சியினூடாக மக்களின்; எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறி விட முடியாது. ஆட்சி மாற்றம் மக்களின் எதிர்பார்ப்புக்களை எட்டவில்லை என்பதை மக்கள் தரப்பிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போடுகின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு சில மாதங்களின் பின்னர் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்பட்ட மாற்றம் கூட்டாச்சி குறித்து மக்களை அதிகம் பேசச் செய்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

கூட்டாச்சியும் பேசு பொருள்களும்.
ஏறக்குறைய 2 கோடி 20 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் ஒரு கோடியே 50 இலட்சம் வாக்களிக்க தமைமை பெற்றிருந்த வாக்காளர்களில் 6,217,162 வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை இற்றைக்கு இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவை ஜானதிபதியாக ஆக்கினர்;.

இவ்வாட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபாலவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியக்காரர்களின் வேற்றுமையை அகற்றும் வகையில் அவர்களுக்கு 3500 மாதாந்த மேலதிக கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு 200ரூபாவால் அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் பத்துக்காக அறவிடப்படும் அதிக வரியை அகற்றி விலையைக் குறைத்தல், எரிபொருட்களின் விலையைக் குறைத்தல், வீட்டுக் கேஸ் விலையை 300வால் குறைத்தல் போன்ற பல சலுகைகள் அத்தேர்தல் விஞ்ஞாபனத்துடன் முன்வைக்கப்பட்டது. அவற்றில் ஒரிரு விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் பயன்கள் மக்களால் அனுபவிக்கப்பட்டன.

இலஞ்சமும், மோசடியும், ஊழலும் நிறைந்த ஆட்சிக்காலத்தில் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களும் பொருளாதார நெருக்கடிகளும் இந்நாட்டில் மீளவும் ஏற்பட்டுவிடக் கூடாது. நாட்டின் ஆட்சி அதிகாரம் கடந்த ஆட்சியாளர்களின் கரங்களில் சென்றுவிடுவதைத் தடுத்தாக வேண்டும். நாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பல கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டு 2015 ஆகஸ்ட் 17ல் நடைபெற்ற 7வது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இக்கூட்டு கட்சிகளின் முன்னணி வெற்றிவாகை சூடியது.

இருப்பினும் தனியே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியினால் ஆட்சி அமைக்க முடியாதபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைமையாகக் கொண்ட சுதந்திரக் கட்சியைப் பிரதானப்படுத்திய கூட்டுக் கட்சிகளின் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்புடன் கூட்டாச்சி உருவாக்கப்பட்டமை தெரிந்த விடயங்களாகும்.

மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும், நிம்மதியை உறுதி செய்வதற்காகவும், இனவாதப் பரப்புரைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்காது அவற்றை ஒழிப்பதற்காகவும், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காகவும் வடக்கு கிழக்கு மக்களி;ன் தீர்க்கப்படாத பிரச்சிணைகளை தீர்ப்பதற்கு ஒருவகையான விட்டுக் கொடுப்புடன் செயற்படு;வதற்காகவும் ஜனவரி 8ல் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தைப் பாதுகாப்பதற்காகவும் என சிவில் அமைப்புக்களின் ஆதரவுடன் போட்டியிட்ட நல்லாட்சிக்கான ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றமை வாக்களித்த மக்கள் மத்தியில் எதிர்கால சுபீட்சம் குறித்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும்; ஒருவகை சந்தேகத்தை காலவோட்டத்தில் ஏற்படுத்திவிட்டது.

அதற்குக் காரணம், அவ்வப்போது இனவாதம் அதன் கைவரிசையைக் காட்ட முனைவதும், மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் விலையேற்றமுமாகும்.

அவற்றோடு, கூட்டாச்சி உருவாக்கப்பட்டு கடந்த இரு வருடங்களில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது பேசு பொருளாகக் காணப்பட்டன. குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்டவர்களை விசாரிப்பதற்காக ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றமை. ; விசாரணைகளின் தீர்ப்புக்களின் பிரகாரம் பலர் கைது செய்யப்பட்டமை, அவன்காட் விடயத்தில் அமைச்சர் திலக் மாரப்பன பதவி துறந்தமை போன்ற விடயங்கள் பேசு பொருளாகக் காணப்பட்டன.

கடந்த ஆட்சியில் பதவியிலும்; அதிகாரத்திலுமிருந்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்பட்ட் விசாரணைகளும், கைதுகளும் பேசுபொருளாக இருந்த காலத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனினால் மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கியின் பிணை முறிவு விடயம் கூட்டாச்சிக்;கு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியதுடன் ஊழல் என்ற பந்தை கூட்டாச்சியின் பக்கம் திருப்பியது. இதனால் இவ்விடயம் பேசு பொருளாக மாறியது. இதன் தொடராக அமைச்சர் ரவி கருணாநாக்கவின் அமைச்சுப் பதவி கேள்விக்குட்படுத்தப்பட்டு அவரும் பதவியைத் துறந்தமையும் மக்களின் பேசு பொருளுக்கான விடயமாக காணப்பட்டன.

இக்கூட்டாச்சியின் இpருவருடக் ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் பல்வேறு நகர்வுகள் மக்கள் மத்தியில் பேசு பொருளுக்கான விடயமாக வந்த நிலையில், 20வது யாப்புப் திருத்தம், அது தொடர்பில் மாகாண சபைகளில் எழுந்த சர்ச்சைகள், அவற்றுக்கான நீதி மன்றத் தீர்ப்பு, அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை. புதிய அரசியலைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்தமை. மாநகர, நகர, பிரதேச திருத்தச் சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் பேசு பொருளாக விளங்கின்றன.

இவற்றோடு இணைந்தாக வடக்கு கிழக்கு இணைப்புக் குறித்த தமிழ் அரசியல் கட்சிகளினதும், அமைப்புக்களினதும், அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகள் குறித்தான கருத்துக்களும், அவற்றிற்கு எதிரானது; சாதகமானதுமான முஸ்லிம் அரசியல் மற்றும் சிவல் சமூகத் தரப்பு வாதங்களும், முஸ்லிம் தனியலகுக் கோரிக்கைகளும், முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பான கருத்தாடல்களும், சைட்டம் தனியார் கல்வி நிறுவனத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கள் மேற்கொள்கின்ற பணிப்பகிஷ்கரிப்புக்கள் எனப் பல்வேறு விடயங்கள் மக்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ள நிலையில், சமூகத்தின் மத்திய தரவர்க்கத்தினர் மத்தியில் பொருட்களினதும், சேiவைகளினதும் விலை அதிகரிப்பு முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.

அதிலும், என்றுமில்லாத அளவிற்கு தேங்காயின் விலை அதிகரித்திருப்பதானது சமயல் அறை முதல் பாராளுமன்றச் சபை வரை பேசு பொருளாக மாறியுள்ளது. பட்டிதொட்டியெங்கும் தேங்காய் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளதுடன் செய்தித் தலைப்பாகவும் வரத்தொடங்கியுள்ளது.

மத்திய தர வர்க்கத்தினரும் பொருட்களின் விலை அதிகரிப்பும்
சமூக மட்டத்தில் வாழும் மக்கள் தொகையினரை வர்க்க அடிப்படையில் பிரித்து நோக்குகின்றபோது, அவர்கள் அடிப்படை வர்க்கத்தினர், மத்திய தர வர்க்கத்தினர் மற்றும் மேல் வர்க்கத்தினர் என வகைப்படுத்தப்படுகின்றனர்.

இதில் எந்தவொரு நாட்டினது சனத்தொகையை எடுத்துக்கொண்டாலும் அதில் அதிகளவிலான எண்ணிக்கை கொண்டவர்களாக இருப்பவர்கள் மத்திய தரவர்க்கத்தினர்தான். நமது அண்டைய நாடான இந்தியாவின் சனத்தொகையில் 300 மில்லியன் மக்கள் மத்திய தர வர்க்கத்தினராக உள்ளனர்.

‘ளுவயவந ழக வாந நுஉழழெஅல 2013” என்ற ஆய்வறிக்கையில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 77 வீதமானோர் மத்திய தர வர்க்கத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக மத்திய தர வர்க்கத்தினர் மாதாந்த வருமானம் பெறுபவர்களாக உள்ளனர். மாதாந்தம் வருமானம் பெறுகின்றவர்களில் அரச மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் தொழில் புரிபவர்களும் அடங்குவர்;. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் அதிகளவிலான மாதாந்த வருமானத்தை பெறுகின்ற போதிலும், சாதாரண பதவி நிலையில் உள்ளவர்கள் குறைந்தளவிலான மாதச் சமபளத்தையே பெறுகின்றனர்.

இக்குறைந்த மாத வருமானத்தைப் பெறுகின்றவர்களே பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிப்பினாலும் மற்றும் ஏனைய விலையேற்றங்களினாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்களாக உள்ளனர்.

கடந்த ஆட்சியாளர்களினால் நாட்டினது கோடிக்கணக்கான பணம் சுரண்டப்பட்டபோதும், வௌ;வேறு பெயர்களில் நாட்டின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட போதும், அதனால் ஏற்பட்ட பண வீக்கம் வெகுவாக பாதித்தது இந்நாட்டில் வாழும் மத்திய தர வர்க்கத்தினரை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார முறையில் 10 வீதமானோர் 75 வீதமான வருமானத்தைப் பெறுகின்றனர். அந்த 75 வீத வருமானத்தைப் பெறுகின்றவர்களின் வாழ்க்கை முறை மிக ஆடம்பரமாகவே கழிகிறது. அவர்கள் மீது பொருட்கள் மற்றும் சேவைகளின்; அதிகரிப்பானது பொருளாதாரச் சுமை ஏற்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு தலைமுடியில் தூசு படுவதுபோலாகும்.

ஆனால், 25 வீத வருமானத்தைப் பெறுகின்ற 90 வீதமானவர்களில்;; பெரும்பாலானோர் மத்திய தர வர்க்கத்தினராக உள்ளனர். இவர்களே பொருட்கள் மற்றும் சேவைகளில் இயற்கையாகவும், செயற்கையாகவும் ஏற்படுத்தப்படும் விலையேற்றத்தினால் பாதிக்கப்படுபவர்களாக காணப்படுகின்றனர்.

ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்படும் சுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாத மத்திய தர வர்க்கத்தினர் ஆட்சியை மாற்றுவதற்கான போராட்டத்திலும் இறங்குகின்றனர். அவ்வாறு ஏற்படுத்தப்படுகின்ற ஆட்சி மாற்றப் புரட்சிகளில் அதிகளவு பங்களிப்புச் செய்யும் ஒரு சமூக மட்ட வர்;க்கத்தினராக மத்திய தர வர்க்கத்தினர் உள்ளனர். இந்த மத்திய தர வர்க்கத்தினரின் அதிக பங்களிப்பு மஹிந்த யுகத்திலிருந்து மைத்திர யுக ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது என்றும் கூறலாம்;.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதிலும் விலைவாசி உயர்வானது மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
சில்லரைக் கடைகளில் விற்கப்படும் சவர்காரம் முதல் பலசரக்குச் சமான்கள் வரை மாத்திற்கு மாதம் இரண்டு ரூபா, மூன்று ரூபா என அதிகரிக்கப்பட்டு வருகி;ன்றபோதிலும் இந்நாட்களில் தேங்காயின்; விலை அதிகரித்திருப்பதானது தேசத்தின் பல்வேறு மட்டங்களிலும் பேசு பொருளாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

தேங்காய் உற்பத்தியும் விலை அதிகரிப்பும்
கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் இலங்கையில் தென்கு உற்பத்தி முக்கோணப் பிரதேசமாகக் கணிக்கப்படுகிறது. இப்பிரதேசங்களில் ஏற்படுகி;ன்ற வரட்சி மற்றும் பல்வேறு காரணிகள் தேங்காய் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனாலேயே விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தென்கு உற்பத்தித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கையில் ஏறக்குறைய 1,088,377 ஏக்கர் நிலைப்பரப்பில தெங்கு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், உள்ளுர் நுகர்வோருக்கு மட்டும் 300 கோடி முதல் 370 கோடி வரையான தேங்காய் வருடாந்தம் தேவைப்படுவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும,; என்றுமில்லாதவாறு தேங்காயின் விலையானது 100 ரூபாவிற்கு விற்கப்படுவதானது பல்வேறு சர்ச்சைகளை தோற்றிவித்துள்ளதுடன் மத்திய தர வர்க்கத்தினர் மீது அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தேங்காய், அரிசி, மரக்கறி உட்பட அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதானது வாக்களித்த மக்கள் அரசின் மீது வைத்திருந்த நம்பிக்கையை கேள்விக் குறியாக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களும், கருத்துக்களும இவற்றைப் புடம் போடுகின்றன.

‘எப்போதும் இல்லாதவாறு தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிக சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் தேங்காய் விலையில் வீழ்ச்சி ஏற்படும் வரை வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்’ என இலங்கை நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஏற்றுமதிக்காகப் பதப்படுத்தப்படும் உலர் தேங்காய் தொழிற்சாலைகளை முன்னெடுத்துச் செல்வது நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது அமைந்துள்ளதாக இலங்கை உலர் தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தேசமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ள தேங்காயின் விலை அதிகரிப்பினால் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள மக்கள் நலன்களைக்; கருதி ‘சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வாகனங்கள் மூலம் தேங்காய்களை விற்பனை செய்யுமாறும் தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தில் அதிக பங்கு வகிப்பவர்கள் வர்த்தக சமூகத்தினராவர் என்பது கட்டாயம் சுட்டிக்காட்டவேண்டிதொன்றாகும். விலை அதிகரிக்கப்படுகின்றபோது உடனடியாக விலையை அதிகரிக்கின்ற வர்த்தகர்கள் பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்கின்றபோது; குறைக்க முன்வராமை அவர்களின் மனப்பாங்கு மக்கள் நலனில் அக்றைகொள்ளவில்லை என்பதைப் புடம்போடுகிறது.

வர்த்தகர்களும் மனப்பாங்கு மாற்றமும்
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகளின் அனுகூலங்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் அதற்கு வழிவிடப்படுவது அவசியமாகும். மக்களின் வாழ்க்கைச் சுமை என்பது அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் விலைக் குறைப்பிலேயே தங்கியுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்தனர். அதற்கு வர்த்தகர்களும் காரணகர்தாக்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதில் தவறிருக்காது. ஏனெனில், ஒரு பொருளில் விலையேற்றம் ஏற்படுத்தப்படும்போது அப்பொருளை குறைந்த கொள்முதலில் கொள்வனவு செய்திருந்தாலும் விலையேற்றம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே விலையேற்றத்திற்கேற்ப விற்பனை செய்யும் வர்த்தகர்கள், ஏதாவது ஒரு பொருளின் விலைக் குறைப்புக்கான அறிவிப்பு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டால்; அவ்விலைக்குறைப்புக் ஏற்ப தங்களிடமுள்ள பொருளை குறைத்து விற்பனை செய்ய முன்வருவதவதில்லை. அதனால் இத்தகைய வர்த்தகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறே பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபடுவோரும் உள்ளனர். எரிபொருட்களுக்கான விலை குறைகின்றபோது சேவையினது பெறுமதியினைக் குறைக்க சேவை வழங்குனர்கள் முன்வருவதில்லை. இந்நிலையில், மத்திய தர வர்க்கத்தினர் மீது கடந்த கால ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரச் சுமையை இறைக்கி வைப்பதற்கான செயல்முறைகள் நடைமுறைப்படுத்துவதுடன் தேசத்தின் பேசு பொருள்களில் ஒன்றாகிப் போகியுள்ள தேங்காய் உட்பட அத்திவாசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது இருப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் கூட்டாச்சி அரசின் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுமே ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

விடிவவெள்ளி -12.10.2017

Web Design by The Design Lanka