தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு சந்தர்ப்பம் » Sri Lanka Muslim

தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு சந்தர்ப்பம்

nic

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஐ. ஏ. காதிர் கான் )


   எதிர்வரும் 2019  ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்  பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள்,  தேசிய அடையாள அட்டைகளுக்காக தற்போதிருந்தே விண்ணப்பிக்க முடியுமென,  ஆட்பதிவுத் திணைக்களத்தின் இயக்க செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

   இதன்பிரகாரம்,  மாணவர்கள் தமது அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலை அதிபர்களின்  ஊடாக அனுப்பி,  அடையாள அட்டைகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அவர் மாணவர்களைக் கேட்டுள்ளார்.

   இதேவேளை, 15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க ஆட்பதிவுத்  திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி,  ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

   இதுதவிர,  தேசிய அடையாள அட்டைகளைப்  பெற்றுக்கொள்வதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 16 வயது வரையிலேயே  இதுவரை காணப்பட்டது. எனினும், இதிலிருந்து 15 வயதாகக்  குறைப்பதற்கான திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதனால், தற்போது இந்நடவடிக்கையை   முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளதெனவும்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka