தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014 தொழில் சந்தை-படங்கள். - Sri Lanka Muslim

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014 தொழில் சந்தை-படங்கள்.

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து  படித்துவிட்டு தொழிலை எதிபார்த்துள்ள இளைஞர், யுவதிகளின் நன்மைகருதி இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை ஏற்பாடு செய்த 2014 தொழில் சந்தை 23-09-2014 இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா , மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) பிரதேச செயலாளர் தவராஜா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மேற்படி தொழில் சந்தையை ஆரம்பித்து வைத்தனர்.

 

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து  படித்துவிட்டு தொழிலை எதிபார்த்துள்ள தமிழ் முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பங்கேற்றனர்.

 

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக தொழில் விவசாய சம்மேளனத்தின் அதிகாரி குகதாஸ் ,மட்டக்களப்பு மாவட்ட செயலக இளைஞர் சேவை அதிகாரிகளான கலாராணி,நிசாந்தி உட்பட மாவட்டத்தில் இயங்கும் பிரபல தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

edu1

 

edu1.jpg2

 

edu1.jpg2.jpg3

 

edu1.jpg2.jpg3.jpg4

 

edu1.jpg2.jpg3.jpg4.jpg5

Web Design by Srilanka Muslims Web Team