தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதி கொடி விநியோக நிகழ்வு - Sri Lanka Muslim

தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதி கொடி விநியோக நிகழ்வு

Contributors
author image

சலீம் றமீஸ்

தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு திருக்கோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதி  கொடி விநியோக நிகழ்வு திருக்கோணமலை உதவிச் சிறைச்சாலை அத்தியட்சகர் திரு.டபிள்யு.ஜி.யு.தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம அதிதி கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு முதற்கொடியினை சிறைச்சாலை அதிகாரியினால் அனுவிக்கப்பட்டது.

 

அமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சு.ஆ. ரம்ழான், சிறைச்சாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்களுக்கும் இந்நிகழ்வின் போது கொடி அனுவிக்கப்பட்டது.

 

இவ்வாறு கொடி மூலம் சேகரிக்கப்படும் நிதி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்டவுள்ளது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த சிறைச்சாலையின் குறை நிறைகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் கவனத்திற்கு சிறைச்சாலை அதிகாரி கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

18

 

19

 

20

Web Design by Srilanka Muslims Web Team