தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது! » Sri Lanka Muslim

தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது!

Contributors

தேசிய ரகர் அணியின் தலைமைப் பதவி உறவு முறைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அணியொன்றின் தலைமைப் பதவி திறமையின் அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும்.

கார்ல்டன் ரக்பி போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மைதானம் நாசமாகியுள்ளது.

தேசிய கிரிக்கட் மைதானமொன்றில் ரகர் போட்டிகள் நடைபெற்றதாக நான் இதுவரையில் வேறு எங்கும் கேள்வி பட்டதில்லை என அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய ரக்பி அணியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன்களான யோசித ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் வகித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற சர்வதேச ரக்பி போட்டித் தொடர் ஒன்றிற்கான இலங்கை அணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(lw)

Web Design by The Design Lanka