தேசிய வாசிப்பு மாதத்தின் சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவு - Sri Lanka Muslim

தேசிய வாசிப்பு மாதத்தின் சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவு

Contributors

தேசிய வாசிப்பு மாதத்தின் 2013ம் வருடத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபையாக காத்தான்குடி நகரசபை தெரிவாகியுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்துக்கான சிறந்த செயல்திறன் மிக்க நகரசபைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கல்விச் சேவைக்கான அமைச்சர் துமிந்த திசாநாயக்க இந்த விருதினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், காத்தான்குடி பொது நூலக உதவி நூலகர் முபாரக் ஆகியோர் நகரசபை சார்பாக இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.v.lk

Web Design by Srilanka Muslims Web Team