தேரர்­களின் இரத்தம் சிந்­தப்­பட்­ட­மைக்கு பிர­த­மரே பொறுப்­பாகும் - ஜாதிக ஹெல உறு­மய - Sri Lanka Muslim

தேரர்­களின் இரத்தம் சிந்­தப்­பட்­ட­மைக்கு பிர­த­மரே பொறுப்­பாகும் – ஜாதிக ஹெல உறு­மய

Contributors

பௌத்த குரு­மாரை விமர்­சித்த பிர­தமர் மன்­னிப்புக் கேட்க வேண்­டு­மென சிஹல ராவய அமைப்பு நடத்­திய அமை­தி­யான ஆர்ப்­பாட்­டத்தின் மீது பொலிஸார் தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்­பி­லான பாவச்­செ­ய­லுக்கு பிர­த­ம­ரான டி.எம்.ஜய­ரத்­னவே பொறுப்­பேற்க வேண்­டு­மென குற்­றம்­சாட்டும் ஜாதிக ஹெல உறு­மய போதை­வஸ்­துக்கு எதி­ரான போராட்­டத்தை எவ­ருக்கும் அடி­ப­ணி­யாமல் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கு­மென்றும் தெரி­வித்­தது.

 

இது தொடர்­பாக ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகச் செய­லாளர் நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேலும் தெரி­விக்­கையில்,
பாரி­ய­ள­வி­லான போதை­வஸ்துக் கொள்­கலன் தொடர்­பா­கவும் அதன் பின்­னணி தொடர்­பா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்ட ஒமல்பே சோபி­த­தேரர் உட்­பட பௌத்த குரு­மாரை பிர­தமர் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்தார்.
பௌத்த சாசன அமைச்­ச­ராகப் பதவி வகிக்கும் பிர­த­மரின் விமர்­ச­னத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று (நேற்று) சிஹல ராவய பௌத்த குருமார் பிர­தமர் வகிக்கும் பௌத்த சாசன அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டு­மென அமை­தி­யாக ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.
பிர­தமர் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து எவ­ரா­வது அதி­கா­ரி­யொ­ரு­வரை அனுப்பி என்ன ஏது வென்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளிடம் வின­வாது, பொலி­ஸாரை ஏவி­விட்டு தாக்­குதல் நடத்­தப்­பட்டு பௌத்த குரு­மாரின் இரத்தம் சிந்­தப்­பட்­டுள்­ளது.
இப் பாவச் செய­லுக்­கான முழுப்­பொ­றுப்­பையும் பிரதமரே ஏற்க வேண்டும்.
இந்தத் தாக்குதலை கண்டிப்பதோடு போதைவஸ்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.(vk)

Web Design by Srilanka Muslims Web Team