தேர்தலில் கறிவேப்பிலையாக மாறியுள்ள முஸ்லிம்கள் » Sri Lanka Muslim

தேர்தலில் கறிவேப்பிலையாக மாறியுள்ள முஸ்லிம்கள்

vote

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ள இத் தருணத்தில் தேசிய ஊடகம் (TV, PAPER) மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பெற்றுக் கொண்ட தகவல்களின் தொகுப்பு

இத் தேர்தலின் ஆரம்ப நாட்களை அவதானித்தால் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிச் செயலாளர்களும் இத் தேர்தல் பற்றிய தெளிவும் அதற்காக விண்ணப்பிக்கும் முறை கூட தெரியாமல் அவதிப்பட்டனர். இதனால் சில தொகுதிகளில் பிரதான கட்சிகளின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

எனது கணிப்புகளின் அடிப்படையில் இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் அதிகமானோர் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஓர் தேர்தலே இதுவாகும். அதிலும் பெண்களின் பங்களிப்பும் பாரிய அளவில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை வரலாற்றில் கட்டாயம் பெண்களும் போட்டியிட வேண்டிய தேர்தலே இத் தேர்தலாகும். இதனால் இத் தேர்தலில் அணைத்து தொகுதிகளிலும் அதிகமான பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இவற்றில் என்னை ஆச்சரியப்படுத்திய அரச ராஜ தந்திரம் இதுதான்.

தெற்கில் முஸ்லிம்களின் வசம் உள்ள ஓர் நகர சபையே வெலிகம நகரசபை இதில் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த H.H. முஹம்மது அவர்கள் போட்டியிடுகின்ற PJP கட்சியின் தேர்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தாத ஓர் சபையே சாய்ந்தமருது பிரதேச சபையாகும். இப்பிரதேச சபைக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் ஆதரவுடன் ஓர் சுயேச்சை குழு போட்டியிடுவதாக தெரிவித்து (அதாவது பள்ளி நிர்வாகத்தினர் பகிரங்க அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்து) கடந்த 9ம் திகதி குறித்த நிர்வாக சபை வக்ப் சபையின் தலையீட்டில்  கலைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்பட்டுள்ளது. (இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் நாட்டில் சில பள்ளிவாசல்கள் கடந்த 1௦ ஆண்டுகளாக ஒரே நிர்வாகத்தில் உள்ளது. அதில் உள்ள ஊழல்களை தேட இவர்கள் வருவதில்லை)

தென் இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்களை வெல்ல முடியாத JVP அணியில்தான் நாடாளாவிய ரீதியில் அதிகமான முஸ்லிம் பெண்கள் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். கடந்த தேர்தலில் அகில இலங்கை ரீதியில் முஸ்லிம்களின் பகிரங்க எதிர்ப்பை பெற்ற PJP அணியில் கிழக்கு மாகாணத்தில் முகத்திரை அணிந்த பெண்களும் போட்டியிடுகின்றனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம்கள் சார்பாக ஒருவர் அல்லது இருவர் போட்டியிட்ட அதுரலிய பிரதேச சபைக்கு இம்முறை 5 முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர்.

தெற்கில் பொதுவாக அணைத்து முஸ்லிம் கிராமங்கள் சார்பாகவும் முஸ்லிம்கள் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளதை அவதானிக்கலாம்.

கடந்த அரசு மக்கள் உள்ளங்களை தாரினாலும், கொங்கிரீட்டினாலும் நிரப்பினர். அதே கொள்கையை இந்த அரசும் பின்பற்றி தெற்கில் சில பகுதிகளில் அரசு பிரதான வீதிகளையும், (நிர்வாகிகளின்) தனியார்  வீதிகளையும் தேர்தல் அறிவித்தலின் பின் புணரமைக்க துவங்கியுள்ளனர்.

ஜனாதிபதியும் தனக்கு ஆறு ஆண்டுகள் நிற்க முடியுமா?? எனக் கேட்டுவிட்டு தேர்தல் மேடைகளில் நான் இன்றே வீடு செல்லத் தயார் என்று சொல்கிறார்.

சுருக்கமாக சொன்னால் இம்முறை முஸ்லிகளில் ஆண்களும், பெண்களும், பள்ளி நிர்வாகிகளும் இது முஸ்லிம் நாடு போல் அரசியல் செய்ய துவங்கியுள்ளனர்.  (இந்த மாற்றம் 2௦1௦ உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்டால் சந்தோசப்படுவேன்.) இன்றுள்ள நிலையில் தேர்தல் சட்டமூலத்தை சரியாக தெரிந்தோர் முஸ்லிம்களை இவ்வாறு போட்டிட்யிடுவது முட்டாள்தனம் என்று கூறுவர். (தேர்தல் சட்டமூலத்தை சரியாக புரிந்து கொள்ள)

அன்பர்களே! முஸ்லிம்கள் அதிகமாக போட்டியிடுகின்றனர் என்று சந்தோசமடையாதீர் இதில் முஸ்லிம் வேட்பாளர்களை சில கட்சிகள் கறிவேப்பிலையாக பயன்படுத்தி உள்ளனர்.

எளிமையாக புரிந்து கொள்ள…

ஹக்மன பிரதேச சபையின் தெனகம தேர்தல் வட்டாரம் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களை வாக்காளர்களை கொண்ட ஓர் தொகுதியாகும். இத் தொகுதியில் சில கட்சிகள் பின்வருமாறு தமது வேட்பாளர்களை நியமித்துள்ளனர்.
கட்சியின் பெயர்    போட்டியிடும் பட்டியல்    2ம் பட்டியல்
A கட்சி    சோமபால    விஜேதாச
B கட்சி    அப்துல்லாஹ்    அபூபக்ர்
C கட்சி    கமால்    ராஜபக்ச
D கட்சி    சமிந்த    அர்கம்

2௦1௦ இல் இடம்பெற்ற தேர்தல் முறைக்கமைய மேற்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகூடிய வாக்குகள் பெற்ற ஒழுங்கின் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினராக பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

புதிய தேர்தல் முறைப்படி குறித்த வட்டாரத்திற்கு ஒரு உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும் மேலும் இம்முறை நாம் வேட்பாளருக்கு அல்ல கட்சிக்குதான் வாக்களிக்க வேண்டும். அவ்வடிப்படையில் குறித்த வட்டராத்தில் A கட்சி வெற்றி பெற்றால் அதில் போட்டியிடும் பட்டியல் உறுப்பினர் சோமபால பிரதேச சபை உறுப்பினராக பதவி வகிக்கலாம். இதில் 2ம் உறுப்பினர் விஜேதாச என்பவரை பிரதேச சபை உறுப்பினராக மாற்றும் அதிகாரம் A கட்சியின் செயளாருக்கே உள்ளது. அவ்வடிப்படையில் அனைத்து கட்சிகளும் 2ம் பட்டியலில் ஒருவரை கறிவேப்பிலை போல்தான் எடுக்கின்றனர்.

குறித்த நான்கு கட்சிகளும் மக்களின் வாக்குகளை பின்வருமாறு எதிர் பார்க்கின்றனர்.

A கட்சி: முழுமையாக சிங்களவர்களின் வாக்குகளினால் உள்நுழைய முனைகின்றனர்.

B கட்சி: முழுமையாக முஸ்லிங்களின் வாக்குகளினால் உள்நுழைய முனைகின்றனர்.

C கட்சி:  முஸ்லிம் வாக்குகளினாலும், சிங்கள வாக்குகளை பெற 2ம் பட்டியல் பெயரை காட்டி  உள்நுழைய முனைகின்றனர்.

D கட்சி: சிங்கள வாக்குகளினாலும், முஸ்லிம் வாக்குகளை பெற 2ம் பட்டியல் பெயரை காட்டி உள்நுழைய முனைகின்றனர்.

இத்தொகுதியில் நாம் முஸ்லிம் ஒருவரை உறுப்பினராக மாற்ற வேண்டும் என்றால் B அல்லது C கட்சிக்குதான் வாக்களிக்க வேண்டும். D கட்சி முஸ்லிம் வேட்பாளர் உறுப்பினராக மாறுவது குறித்த கட்சி செயலாளரின் தயவில்தான்.

இறுதியாக உங்கள் சிந்தனைக்கு இரு நபிமொழிகள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் (தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்.  அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.

அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். (புஹாரி 5188)

ஜமல் போர் சமயத்தில் அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்து கொன்டு (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முற்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளித்தான்.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது. அவர்கள் “தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது” என்று சொன்னார்கள்.  (புஹாரி 4425)

Ibnuasad

Web Design by The Design Lanka