தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கவில்லை: ஹிருனிகா - Sri Lanka Muslim

தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கவில்லை: ஹிருனிகா

Contributors

மேல்மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஆலோசகரான படுகொலைசெய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திரன் தெரிவித்தார்.

மேல்மாகாண சபைத்தேர்தலில் தன்னை களமிறக்குவது தொடர்பில் பல அரசியல் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் போட்டியிடுமாறு வற்புறுத்தி, அரசாங்க எம்.பிக்க பல ஹிருனிகாவுடன் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அவர் இன்னும் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும்,தங்களுடைய கட்சியில் போட்டியிடுமாறு அவரிடம் பல கட்சிகள் கேட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.(tm)

Web Design by Srilanka Muslims Web Team