தேர்தலுக்கான அச்சிடும் நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கக் கோரி திறைசேரிக்கு கடிதம்! - Sri Lanka Muslim

தேர்தலுக்கான அச்சிடும் நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கக் கோரி திறைசேரிக்கு கடிதம்!

Contributors

தேர்தலுக்கான அச்சிடும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை வழங்கக்கோரி திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் திறைசேரியின் செயற்பாட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தின் நகலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

அச்சகப் பணிகளுக்கு பணம் கேட்டு முன்னதாக நிதியமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அரச அச்சகர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team