தேர்தல் காலங்களின் மாத்திரம் மக்களை நாடுபவர்கள் ஒதுக்கப்பட வேண்டும். » Sri Lanka Muslim

தேர்தல் காலங்களின் மாத்திரம் மக்களை நாடுபவர்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

26114213_1581409478607483_3490967552016454018_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(ஐ.தே.கட்சி வேட்பாளர் இர்சாத்)

குறுகிய காலத்தில் முழுக் கிழக்கிலங்கையூம் சேவைகள் மூலம் மாற்றியமைத்த முன்னாள் முதலமைச்சரின் வெற்றிகரமான முன்னெடுப்புகள் ஏறாவூர் மக்களுக்கு முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் என்ற ஆசை என்னுள் என்றும் இருந்து வருகின்றது என்று முஸ்லிம் காங்கிரஸ் – ஐக்கிய தேசிய கூட்டுக்கட்சியின் 09ம் வட்டார வேட்பாளர் எம்.பி.எம்.இர்சாத் தெரிவித்தார்.

09ம் வட்டார (ஓட்டுப்பள்ளி வட்டாரம்) மக்களின் குறைகளை கேட்டறியூம் நோக்கில் முன்னாள் முதலமைச்சருடன் மக்களை நேரடியாக சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் மக்களை போலி வார்த்தைகளையூம் வாக்குறுதிகளையூம் கூறி அவர்களை ஏமாற்றிய காலம் முன்னாள் முதல்வரின் ஆட்சி கிழக்கில் ஆக்கிரமித்த போதே அவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது மீகுதி உள்ளவைகளை இல்லாமல் செய்வதற்கே நாம் இத் தேர்தலில் களம் இறங்கியூள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் போலி வார்த்தைகளை நம்பி தமது உரிமைகளை வீண்விரயம் செய்வதால் பாதிப்படைவது நாமே தவிர வேறு ஒருவரும் இல்லை. தேர்தல் காலங்களின் மாத்திரம் மக்களை நாடுபவர்களை ஒதுக்கி ஏன்றும் மக்களோடு மக்களாக நின்று சேவை செய்யூம் சிறந்த ஆட்சி உருவாக நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் மிக அவதானத்துடன் யோசனை செய்து வாக்களிக்க வேண்டும்.

வாக்களிக்கும் உரிமையை யாரும் தடுக்க முடியாது ஆனால் நமது முடிவு எதிர்கால சந்ததியின் வாழ்கையையை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அகமட் உட்பட வேட்பாளர்களும் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

Web Design by The Design Lanka