தேர்தல் தில்லாலங்கடிகள் (கவிதை) » Sri Lanka Muslim

தேர்தல் தில்லாலங்கடிகள் (கவிதை)

election

Contributors
author image

Editorial Team

Mohamed Nizous


ஊழல் மறுத்தல்
உள்ளால் அறுத்தல்
காலை வாரி விடல்
மாலை போடல்
கீழே தள்ளி விடல்
கிடைத்ததை சுருட்டல்
கூலிக்கு மாரடித்தல்
கூட்டத்தில் கத்தல்
கேலி செய்தல்
கேள்வி கேட்டல்
சாலை மறித்தல்
சண்டித்தனம் புரிதல்
சீலை கொடுத்தல்
சிரமதானம் செய்தல்
வால் பிடித்தல்
வாளி கவிழ்த்தல்
வேலை கொடுத்தல்
வேடுவரை சந்தித்தல்
என்று தொடரும்
இனி வரும் நாட்கள்

வட்டார வெறிகள்
விட்டு விட்டுப் பாயும்
மட்ட ரக வார்த்தைகள்
மா நாட்டை உலுக்கும்

போஸ்டர் போட்டோ
புன்னகை புரியும்
நோட்டிஸ் கட்டு
நுளம்பாய்ப் பறக்கும்

கருத்து மோதல்கள்
காதைக் கிழிக்கும்
தெருத்தெருவாக
தேர்தல் ஒலிக்கும்

நல்லவர் சிலரும்
நன்முறை நடந்து
உள்ளூராட்சியை
வெல்ல முனைவார்

தேர்தல் என்பது
தெரிதல் என்பதால்
யாரும் முனைவார்
எதிர்ப்பவரை அடக்க….!

Web Design by The Design Lanka