தேர்தல் வருகிறதாம்! » Sri Lanka Muslim

தேர்தல் வருகிறதாம்!

vote5.jpg8_

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


தேர்தல் வருகிறதாம்
தெரிவுகள் வருகிறதாம்
ஊர்கள் முழுக்க
ஓயாமல் பேச்சு.

குப்பை மேட்டரு
லெப்பையின் வயிறு போல்
பெரிதாய் இருக்கும்
பேசும் மேடைகளில்

ஒவ்வொரு ஊரிலும்
ஊத்தையை எடுத்து
செவ்வாய் கிரகத்துக்கு
send பண்ணுவோம் என்பார்

ஒன்பதாம் அதிசயம்
ஊரில் உருவாக்க
எங்களுடன் வாங்க என
ஸ்பீக்கரில் சொல்வார்

சாப்பாடு சந்திப்பு
சற்பிகேட் வழங்கலென
ஏற்பாடு எல்லாம்
எலக்ஸனை குறிவைக்கும்

ஆச்சி சுகமா
அடுப்படி நனையுதா
ஆட்சிக்கு வந்தபின்
அனைத்தும் மாறும் என்பார்

போட்டோ எடிட்டால்
போஸ்டரில் ‘தலை’யுடன்
கூட்டாளி போல
கொஞ்சிக் குலாவுவார்.

மீண்டும் தாஜுதீன்
தோண்டப் படலாம்
நீண்ட அறிக்கைகள்
நெருப்பாய் வரலாம்

ஆனைக்கு சில நேரம்
அடியும் சறுக்கலாம்
நெல்லை மிகைத்து
வெல்லலாம் சால்வை

மிஸ்டர் பொதுமகன்
மீண்டும் ஒரு முறை
கஷ்டம் நீங்கும் என
கனவுடன் வாக்கிடுவார்

வாக்குப் பதிவினால்
வாழ்க்கை மாறாது
ஆட்களை மாற்றுவதால்
ஆவது ஒன்றுமில்லை

Web Design by The Design Lanka