தேவயானி விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு - Sri Lanka Muslim

தேவயானி விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு

Contributors

அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது.

 

இது குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீர், டெல்லியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், “தேவயானியை அமெரிக்கா நடத்திய விதம் வேறு எந்த நாட்டு அதிகாரிக்கும் நடக்கக் கூடாது.

 

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் வியன்னா மாநாட்டு தீர்மானத்தின்படி தூதரக அதிகாரிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்” என்றார். முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஷார்யார் எம். கான் கூறுகையில்,

 

“தூதரக அதிகாரியை அமெரிக்கா இந்த அளவுக்கு மோசமாக நடத்தியிருக்கக் கூடாது. வியன்னா மாநாட்டு தீர்மானத்தில் எந்த ஒரு தூதரக அதிகாரியையும் கைது செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team