தேவைப்பட்டால் நாட்டை முழுமையாக, முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - Dr சுதர்ஷினி..! - Sri Lanka Muslim

தேவைப்பட்டால் நாட்டை முழுமையாக, முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – Dr சுதர்ஷினி..!

Contributors

தேவைப்பட்டால் மட்டுமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் சற்றுமுன்னர் அறிவித்தது.

“நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும் எட்டப்படும்” என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ், மிகவேகமாக பரவிவரும் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 வைரஸ் தொற்றுவதில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்க விரும்பும் நடவடிக்கைகள் என்னவென, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜயரத்ன, கேள்வி எழுப்பினார்.

இரத்தோட்டையில் வைரஸ் வியாபித்துள்ளது. அங்கு பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஆகையால், இரத்தோட்டையை முடக்குவதற்கு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்றும்​ ரோஹினி விஜயரத்ன கேள்வியெழுப்பினர்.

இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Web Design by Srilanka Muslims Web Team