தேவையான நேரத்தில் ரணில் பாராளுமன்றத்துக்கு செல்வார் மறுத்தால் பிரதித் தலைவர் செல்வார் என்கிறார் ஆசு மாரசிங்க - Sri Lanka Muslim

தேவையான நேரத்தில் ரணில் பாராளுமன்றத்துக்கு செல்வார் மறுத்தால் பிரதித் தலைவர் செல்வார் என்கிறார் ஆசு மாரசிங்க

Contributors

எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேவையான நேரத்துக்கு பாராளுமன்றத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கின்றோம். அவர் மறுத்து விட்டால் பிரதித் தலைவர் செல்வார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றம் செல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் ஆணை கிடைக்கவில்லை. தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்திருக்கின்றது.

தற்போதைய சூழ்நிலையில் கிடைத்திருக்கும் தேசியப்பட்டியலில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்றே கட்சியி செற்குழுவில் தீர்மானிக்கபட்டு, அது தொடர்பில் அவருக்கு அறிவித்திருக்கின்றோம். அதனால் தேவையான நேரம் வரும்போது அவர் பாராளுமன்றத்துக்கு செல்வார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

என்றாலும் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்துக்கு செல்வதை மறுத்தால் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன செல்வார். அதற்கான அனுமதியை கட்சியின் அதிகார சபை வழங்கி இருக்கின்றது.

இருந்தபோதும் பாராளுமன்றத்துக்கு வெளியில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து, அவர்களை ஊக்கப்படும் வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றோம். கிராம மட்டத்தில் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம்.

மேலும் கிராம மட்டத்தில் மக்களுடனான சந்திப்புக்களின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தேவையை தற்போது அவர்கள் உணர்ந்து வருகின்றதை எமக்கு விளகிக் கொள்ள முடிகின்றது.

அதேபோன்று பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசிய கட்சியின் தேவை ஏற்படும்போது, அந்த நேரத்தில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எமது உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்ல நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team