தொடர்ச்சியாக 14 நாட்கள் கடுமையான முறையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே நன்மைகிட்டும் - திஸ்ஸ விதாரன..! - Sri Lanka Muslim

தொடர்ச்சியாக 14 நாட்கள் கடுமையான முறையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே நன்மைகிட்டும் – திஸ்ஸ விதாரன..!

Contributors

தொடர்ச்சியாக 14 நாட்கள் கடுமையான முறையில் நாட்டை முடக்கினால் மாத்திரமே ஒரு சிறந்த தீர்வை பெற முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை தற்போது அமுலில் உள்ளது.

பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை.

சிறந்த திட்டமிடல் இல்லாத வகையில் தற்போது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அத்தியாவசிய தேவையினை நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய நெருக்கடிகளையும் எதிர்க் கொண்டுள்ளார்கள். அத்துடன் பயணத்தடை காலத்தில் பொது மக்கள் குறிப்பாக கொழும்பில் பொது மக்கள் சாதாரண நாட்களில் வீதிகளில் நடமாடுவதை போன்று நடமாடுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் பயணத்தடை அமுல்படுத்துவதால் எவ்வித நோக்கமும் கிடையாது. புதுவருட கொவிட் கொத்தணி தோற்றம் பெற்ற போது நாட்டை 14 நாட்கள் முழுமையாக முடக்குவது அவசியம் என சுகாதார தரப்பினர் முன்வைத்த யோசனை புறக்கணிக்கப்பட்டது.

ஓரிரு நாட்களுக்கு நாட்டை முடக்கி பிறகு பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தடையை நீக்குவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.

பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை முழுமையாக வழங்கி அதன் பின்னர் 14 நாட்களுக்கு கடுமையான முறையில் நாட்டை முடக்குவது சிறந்தாகவும், ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதாகவும் அமையும் இதனை விடுத்து இடைவெளி விட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team