தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில் நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறை - Sri Lanka Muslim

தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில் நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறை

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில் நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளதாக அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் தெரிவித்தார்.

 

இதுவிடயமாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கணனி உதவியுடன் கமெரா, வீடியோ, ஓடியோ போன்ற தொடர்பு சாதனத்துறைக்கு அவசியமான கருவிகளை கையாளுவதற்கும், செய்திகள் சேகரிப்பதற்கும், அதனை முறையாக எழுதுவதற்கும் தேவையான நுணுக்கங்கள் இப்பயிற்சி பட்டறை மூலம் வழங்கப்படும்.

 

எமது அல்மனார் நிறுவனம் ஆற்றிவரும் செயல்வடிவங்களில் இன்னுமொரு நடவடிக்கையாக இது அமைவதுடன் இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து நாட்டுப்பற்றுடன் கூடியதாக எவ்வாறு வாழ்ந்து வருகிறார்கள் என்பதனை முறையாக, நெறிப்படுத்தி தெரியப்படுத்தும் ஊடகச்செயற்பாடுகள் மிக அரிதாகவே காணப்டுகின்றது. எமது இத்தகைய பட்டறகள் மூலம் இக்குறைகளை நிவர்த்திக்க முடியும் என்று நாம் கருதுகின்றோம்.
 
தொடர்பு சாதனத்துறையில் ஆர்வமுள்ள ஆண்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை எமது அல்மனார் நிறுவனத்தின் ஊடகப்பிரிவுடன் அல்லது 071 8530151 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதுடன் அதனை பூர்த்தி செய்து 14.09.2014 ஞாயிற்றுக்கிழமைக்கிடையில் வழங்குமாறும் இதற்கான நேர்முகப்பிரீட்சை எதிர்வரும் 16.09.2014 செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் இடம்பெறு மெனவும் அஷ்ஷெய்க் மும்தாஸ் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team