தொடர்மழையால் கிழக்கின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன (படங்கள் இணைப்பு) - Sri Lanka Muslim

தொடர்மழையால் கிழக்கின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன (படங்கள் இணைப்பு)

Contributors

 

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும்  பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது கடும் மழையுடன் காற்றும் வீசிவருவதால் கடல் கொந்தளிப்பும் காணப்படுவதுடன் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் செல்லாத காரணத்தால் மீன்களுக்கு அதிகம் தட்டுப்பாடு நிலவுவதுடன் மீன்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்புஇகல்லடி , காத்தான்குடிஇ  புதிய  காத்தான்குடி இஏத்துக்கால்இகர்பலாஇபாலமுனைஇகிரான்இ கல்லாறுஇ                       பெரிய கல்லாறுஇதுறைநீலாவணை ,களுவாஞ்சிக்குடி ,பட்டிப்பளை,வவுனதீவு ஓள்ளிக்குளம் ,மண்முனை,சிகரம், புல்லுமலை, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை,நாவலடி, வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால்  மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்யும் தொழிலாளிகளும் பெரிதும் அவஸ்தைப் படுகின்றனர்.

தொடச்சியாக பெய்துவரும் அடை மழையால் ஆறு,கடல்,குளம் மற்றும் கிணறு ,நீர் நிலைகள் அனைத்தின் நீர் மட்டங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Web Design by Srilanka Muslims Web Team