தொடர் சிறையால் நீதிக்கு ஏங்கும் அஹ்னப் ஜாஸிம் ! - Sri Lanka Muslim

தொடர் சிறையால் நீதிக்கு ஏங்கும் அஹ்னப் ஜாஸிம் !

Contributors
author image

Press Release

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.

இன்றைய தினம்(15/11/2021) ஏற்கனவே கூறப்பட்டதற்கமைவாக மேல் நீதிமன்ற வழக்கானது எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் சரியாக 10:13 (A.M) மணி அளவில் கொழும்பிலிருந்து வந்த சிறைப்பேருந்து(prison bus) புத்தளம் சிறையை வந்த அடைந்தது அதன் பிறகு ஒரு நிமிடத்தில் பலத்த பாதுகாப்புடன் என் சகோதரர் Ahnaf Jazeem இரு கைகளையும் விலங்கிடப்பட்ட வகையில் நீதிமன்ற வளாகத்தினுள் கொண்டு செல்லப்பட்டார்.

குடும்பமாய் எங்களுக்கும் நீதிமன்ற வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது நாங்களும் அங்கே வழக்கின் முடிவுக்காக
காத்துக்கொண்டிருந்தோம்.

சிறிது நேரம்(20-30 நிமிடங்கள்) கழித்து எமக்கான சட்டத்தரணிகளை சந்தித்தத்தோம்.எமக்கான வழக்கு முடிவடைந்துவிட்டது என்று கூறினார்கள். அடுத்த புத்தளம் மேல் நீதிமன்ற வழக்கானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபருக்கு ( AG) கொடுக்கப்பட்ட கடிதத்திற்கான பதிலின் நிலைப்பாட்டை பொருத்தே நீதிபதியினால் ஒரு முடிவு கொடுக்கப்படும் என்று முடிவு வழங்கப்பட்டது. எனவே அதன் பின்பு சற்று நேரத்தின் பின் கொஞ்சம் நேரம் (30 நிமிடங்களுக்கு மேல்) தாமதித்து எனது சகோதரர் மீண்டும் கொழும்புக்கு கொண்டு செல்வதாக வேண்டி வலுப்பாதுகாப்புடன் நாங்கள் அருகில் நெருங்க முடியாதளவு ஆறு பேர் கொண்ட போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துக்கு கொண்டு சென்றார்கள். புத்தளம் சிறைச்சாலையினுள் பேருந்து தரிப்பிடம் செய்யப்பட்டிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் குடும்பம் ஆகிய நாம் ஒன்றரை வருடங்கள் கழித்து என்னுடைய சகோதரரை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் பேசவோ கதைக்கு வேறு எந்த இதர விடயங்களையும் செய்ய முடியாத நிலையிலேயே இருந்தது. ஒரு நேரத்திற்கான சாப்பாட்டு பொதியை வழங்க சென்றபோது அந்தப் சாப்பாட்டை வழங்குவதற்காக நீதிபதியின் அனுமதி கிடைக்கப் பெற வேண்டும் என்று கூறப்படும் அளவுக்கு மிகவும் பலத்த பாதுகாப்புடன் விசேடமான (special ) வருகையினால் கொழும்பிலிருந்து (CRP) எனது சகோதரர் மாத்திரமே நேரடியாக கொண்டு வரப்பட்டார்.

எனவே அடுத்த தவணையில் எல்லாம் வல்ல இறைவனின் நாட்டப்படி எல்லாம் சுமுகமாகும் விடுதலையோடு வீடு திரும்ப அஹ்னபிற்காக #AhnafJazeem வேண்டி பிரார்த்தனை செய்து உதவி புரிந்திடுமாறு தயவுடன் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.

Web Design by Srilanka Muslims Web Team