தொலை பேசி கட்டண வரி » Sri Lanka Muslim

தொலை பேசி கட்டண வரி

phone

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ப்ரீயாக கோல் போட்டு
பேசிய காலம் போய்
வரியோடு பேசும் காலம்
வந்து சேர்ந்திருக்கு.
சரியாக அரைவாசி
சர்க்காருக்கு வரியாகும்.
கரியாகும் காசிதென்று
கனக்கப் பேர் ஏசுகிறார்.

சுகமான்னு விசாரிக்க
சோகத்தை தெரிவிக்க
மகளோடு உம்மாமார்
மன போட்டு பேசுதற்கு
தகவல் சொல்வதற்கு
தரவுகளை அறிவதற்கு
ஹலோ என்று சொல்லி
கதைக்கத் தொடங்கி
பல வரிகள் பேச
பல வரிகள் உடனே
மள மளண்ணு ஏறும்
மனிசன் மனம் வாடும்.

எடுக்கிற வரியில
எம் பிக்கு வாகனம்.
கட்டுற வரியில.
கட்டிடம் மந்திரிக்கு.
வரிகளில் ஊழல் செய்யும்
நரிகளும் இங்கே உண்டு.
செலுத்தும் வரியில
சில்லறை கொஞ்சமே
ஒழுங்காய் தேவைக்கு
ஒதுக்கப் படுகிறது.

காற் பங்கை வரியாக
கட்டியதே கன்றாவி.
அரைப் பங்கை இப்போது
அறவிடுதல் என்றாகி.
இனி வரும் காலத்தில்
இதுவும் அதிகரித்து
மூச்சுக்கும் பேச்சுக்கும்
முழுதாக வரி வருமோ?

Web Design by The Design Lanka