தோப்பூரில் யானைத் தாக்குதல்: முகம்மது தம்பி என்பவர் வபாத் » Sri Lanka Muslim

தோப்பூரில் யானைத் தாக்குதல்: முகம்மது தம்பி என்பவர் வபாத்

e.jpeg3.jpeg33

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி, அப்துல்சலாம் யாசீம்


திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதாகவும் அவரது ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது சடலமாக மீட்கப்பட்டவர் தோப்பூர் செல்வநகர் 09 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பிச்சைத் தம்பி முஹம்மது அனீபா வயது (60) என்பவராவார்.

குறித்த நபர் வியாழக்கிழமை காலை சேருநுவர காட்டுப் பகுதிக்கு விறகு எடுக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்று மாலையாகியும் வீடு சேராமையினால் அவரது குடும்பத்தினர் சேருநுவர பொலிஸில் முறைப்பாடு செய்து விட்டு ஊரவர்வர்களுடன் இணைந்து குறித்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடாத்தியும் சடலம் மீட்கப்படவில்லை.

மீண்டும் சேருநுவர பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை சேருநுவர காட்டுப் பகுதியில் தேடுதல் நடாத்திய போது அவர் விறகு எடுப்பதற்காகச் சென்ற துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மீண்டும் தேடுதல் மேற் கொண்ட போது துவிச்சக்கர வண்டி கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு இன்று காலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லா சென்று விசாரணைகளை மேற் கொண்டதோடு சடலம் அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.e.jpeg3 e.jpeg3.jpeg33 e.jpeg3.jpeg33.jpeg5 e 

Web Design by The Design Lanka