தோப்பூரில் 08 முஸ்லிம் வீடுகளில் ஒரே இரவில் திருட்டு - Sri Lanka Muslim

தோப்பூரில் 08 முஸ்லிம் வீடுகளில் ஒரே இரவில் திருட்டு

Contributors

-அலுவலக ஊடகவியலாளர்-

 

தோப்பூரில் 08 முஸ்லிம் வீடுகளில் பணம் மற்றும் நகை திருட்டுச் சம்பவங்கள் கடந்த புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.

 

தோப்பூர் இரண்டு ,மூன்று ,நான்காம் பிரிவுகளில் இத் திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரே இரவில் இவ்வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதால் பிரதேசவாசிகள் சந்தேகம் கொள்கின்றனர்.

 

திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு நிறத்துடன் பலமான உடம்பு தேகம் உடையவர்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இதே ஒத்த சம்பவம் இரண்டு வாரத்திற்கு முன்னர் நிலாவளி முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெற்றது. இங்கு வீட்டினுள் நுழைந்தவர்கள் நகை, பணம் எதனையும் திருடாமல் வீட்டினை சோதனையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team