தோப்பூர் கிறீன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி » Sri Lanka Muslim

தோப்பூர் கிறீன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி

c99

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட 20-20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் தோப்பூர் கிறீன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி சம்பியனாக தெரிவானது.தோப்பூரில் உள்ள 26 கடினபந்து அணிகள் பங்கு பற்றிய இப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று சனிக்கிழமை மாலை தோப்பூர் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களி மத்தியில் இடம் பெற்றது.

கிறீன் ஸ்டார், ஈஸ்ட் லங்கா ஆகிய அணிகள் மோதிய இவ் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஈஸ்ட் லங்கா அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.அவ் அணி சார்பாக அதிகபட்சமாக எம்.பஸ்ரின் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களை பெற்று சதத்தினை பூர்த்தி செய்தார்.

180 என்ற வெற்றி இழக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய கிறீன் ஸ்டார் அணியினர் 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து182 ஓட்டங்களை பெற்று மேலதி 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இவ் அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய றபீக் மிஸ்பாஹ் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளை எதிர் கொண்டு 12 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 102 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இவ் இறுதிப் போட்டியில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் கலந்து கொண்டதோடு விசேட அதீதிகளாக மூதூர் பிரதேச சபையின் முன்னால் செயலாளர் ஜே.நஜாத், மூதூர் ஹாதீ நீதிவான் எஸ்.எம்.றிஸ்வான் மௌலவி, மூதூர் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர்களான பீ.டி.ஆப்தீன், ஏ.ஜீ.நிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

c99 c.jpg2.jpg5 c.jpg2.jpg3.jpg5 c.jpg2.jpg3 c.jpg2 c

Web Design by The Design Lanka