தோப்பூர் 'ரியல் ஹீரோ' கழகம் வெற்றி » Sri Lanka Muslim

தோப்பூர் ‘ரியல் ஹீரோ’ கழகம் வெற்றி

n99

Contributors
author image

தோப்பூர் நிருபர் முஹம்மட் புஹாரி

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 09வது போட்டி திங்கட்கிழமை (08) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் மூதூர் ரியல் ஸ்டார் , தோப்பூர் ரியல் ஹீரோ ஆகிய அணிகள் மோதிய இப் போட்டியில் தோப்பூர் ரியல் ஹீரோ விளையாட்டுக் கழகம் 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மூதூர் ரியல் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.இவ் அணி சார்பாக எம்.அக்ரம் மாத்திரம் அதிகபட்சமாக 20 ஓட்டங்களை பெற்றார்.

91 என்ற இலகுவான வெற்றி இழக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தோப்பூர் ரியல் ஹீரோ விளையாட்டுக் கழகம் 14.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 91 என்ற வெற்றி இழக்கினை அடைந்தது.இவ் அணி சார்பாக சாதீக் சர்பராஜ் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய தோப்பூர் ரியல் ஹீரோ வீரர் சாதீக் சர்பராஜ் தெரிவானார்.

மெட்ரோ நியூஸ் பத்திரிகைகளின் ஊடக அனுசரணையில் இடம் பெற்ற இப் போட்டித் தொடரின் 8வது போட்டியில் பிரதம அதீதியாக தோப்பூர் இக்பால் நகர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், றினா கன்ஸ்ரக்சன் உரிமையாளரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் எம்.றினூஸ் கலந்து சிறப்பித்தார்.

n n.jpg2 n.jpg2.jpg3 n.jpg2.jpg3.jpg5 n.jpg2.jpg3.jpg6

Web Design by The Design Lanka