கத்தாரில் புகலிடம் பெற்றிருந்த முக்கிய இஹ்வானிய தலைவர்கள் ஏழுபேரை அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் - Sri Lanka Muslim

கத்தாரில் புகலிடம் பெற்றிருந்த முக்கிய இஹ்வானிய தலைவர்கள் ஏழுபேரை அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள்

Contributors
author image

Dr. Inamullah Masihudeen

எகிப்தின் சட்டபூர்வ அரசிற்கெதிரான இராணுவ சதிப் புரட்சியின் பின்னர் கத்தாரில் புகலிடம் பெற்றிருந்த முக்கிய இஹ்வானிய தலைவர்கள் ஏழுபேரை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு கத்தார் அரசின் மீது பிரயோகிக்கும் இராஜதந்திர அழுத்தங்களின் பேரில் விடுக்கப்பட்டுள்ள மேற்படி வேண்டுகோளினை மதித்து தலைவர்கள் வெளியேறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

ஏற்கனவே கட்டரில் இருந்து சவூதி அறேபியா, ஐக்கிய அறபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது தூதுவர்களை திருப்பி அழைத்திருந்தமை தெரிந்ததே.

 

கடந்த ஒருவாரகாலமாக ஜித்தாவில் இடம்பெற்ற வளைகுடா நாடுகளின் வெளியுறவுகள் அமைச்சர்கள் மாநாட்டின் பின்னர் கட்டாருடனான உறவு விரிசலை சரி செய்துகொள்வதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

தமது இருப்பினால் கத்தார் அரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தாம் விரும்பவில்லை என ஏற்கனவே ஹமாஸ் மற்றும் இஹ்வானிய தலைவர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team