நடுக்கடலில் தத்தளித்த மியன்மார் மீனவர்கள் மூவர் மீட்பு » Sri Lanka Muslim

நடுக்கடலில் தத்தளித்த மியன்மார் மீனவர்கள் மூவர் மீட்பு

Contributors

சீரற்ற காலநிலை காரணமாக திசை மாறி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் மீனவர்கள் மூவர் இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பில் நேற்று (19) மாலை குறித்த மியன்மார் மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் திருகோணமலை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் மீனவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ad)

Web Design by Srilanka Muslims Web Team