நடுவீதியில் சமைத்து உண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அக்கரைப்பற்று மக்கள் - Sri Lanka Muslim

நடுவீதியில் சமைத்து உண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அக்கரைப்பற்று மக்கள்

Contributors

அக்கரைப்பற்று மக்கள் இன்று வீதியில் சமைத்து உண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நடத்தியுள்ளனர்.

ஆழிப்பேரலையில் அழிவுற்று ஒன்பது வருடங்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கட்டி முடிக்கப்பட்ட நுரைச்சோலை வீடுகளைக் வழங்காமல் உள்ளதை எதிர்த்தும் அந்த வீடுகளை தங்களிடம் வழங்கக் கோரியும் பாதிக்கப்பட்ட இந்நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் நாளை முதல் பெரியளவில் முன்னடுக்கப்படும் எனவும் மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team