நண்பர்கள் சேர்ந்த செய்த கொடூரம்! இளம்பெண்ணை சீரழித்தனர் - Sri Lanka Muslim

நண்பர்கள் சேர்ந்த செய்த கொடூரம்! இளம்பெண்ணை சீரழித்தனர்

Contributors

மும்பையில் 16 வயது சிறுமியை கட்டாயமாக பீர் குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுஷ்மாவுக்கு(பெயர் மாற்றம்- வயது 16) தந்தை இல்லை, தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தாயும் இவர்களை விட்டு சென்று விடவே சகோதரனும்- சுஷ்மாவும் இருந்தனர்.

சுஷ்மாவிற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 20 வயதுக்கு உட்பட்ட 2 பேர் நண்பர்களாக அறிமுகமாகி இருந்தார்கள்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 1ம் திகதி இரவு சுஷ்மாவைத் தொடர்பு கொண்டு, தீபாவளி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இவர்களை நம்பி அங்கு சென்றார் சுஷ்மா, நண்பர்களுடன் மேலும் 2 பேர் சேர்ந்து கொண்டு கட்டாயமாக பீர் குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர் நால்வரும் சேர்ந்த பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர், இவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து சுஷ்மா வீடு வந்து சேர்ந்தார்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து ஏதும் தெரிவிக்காமல், நேற்று தான் கூறியுள்ளார்.

இதனையடுத்து சுஷ்மாவின் சகோதரர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவரை அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார்.

வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர், இவர்களில் இரண்டு பேர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team