நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று முன்னரே உணர்ந்தேன்! » Sri Lanka Muslim

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று முன்னரே உணர்ந்தேன்!

Contributors
author image

Editorial Team

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று தான் ஏற்கனவே உணர்ந்துள்ளதாகவும், ஆனால் வன்முறையை நியாயப்படுத்த இதை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது போன்ற கேலிச்சித்திரங்களால் மக்கள் அதிர்ச்சியடையக்கூடும் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், வன்முறையை நியாயப்படுத்த இதனை நான் செய்ததாக கூறும் கூற்றை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நீஸ் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் மூன்று பேர் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததையடுத்து தாக்குதல் தொடுத்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும் ,“நம்முடைய சுதந்திரங்களையும், உரிமைகளையும் பாதுகாப்பது என் கடமையாக நான் கருதுகிறேன்.” என்றும் மக்ரோன் கூறியுள்ளார்.

Web Design by The Design Lanka