நபியின் தோழரும் fbயின் வீரரும் » Sri Lanka Muslim

நபியின் தோழரும் fbயின் வீரரும்

face

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


காலித் இப்னு வலீத் போல
கர்ஜனை செய்யும் போராளி,
போலி ஐடியில் மறைந்திருப்பார்
புதுமை மிகுந்த வீரம் இது.

உமரின் வீரம் வேண்டுமென
உரக்க உறுமும் போராளி
குமரின் ஐடியைக் கண்டுகொண்டால்
குழைவார் இன்பொக்ஸில் சலாம் சொல்லி.

அலியின் அறிவை fbயில்
அளிக்கும் கல்விப் போராளி
துளியும் அறிவின்றி நடிகைக்கு
தொடர்ந்து கொடுப்பார் பல லைக்கள்.

நேர்மையாய் வாழ்ந்த அபூபகரை
நெகிழ்ந்து புகழும் போராளி
யாரோ எழுதிய ஆக்கத்தை
எடுத்து விடுவார் தன் பெயரில்.

பிஸ்ஸாவும் பெப்சியும் சுவைத்த படி
பிலாலின் எளிமையை ஆராய்ந்து
கிஸ்ஸா கிஸ்ஸாவாய் போஸ்ட் இடுவார்
கேட்டால் நவீன மார்க்கமென்பார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் போல
அள்ளிக் கொடுக்க வேண்டுமென்பார்
சப்தமின்றி நழுவிடுவார்
சகோதரர் யாரும் உதவி கேட்டால்.

ரழியள்ளாஹு அன்ஹும் வரளு அன்ஹும்
ரப்பைப் பயந்த அந்த தோழர்களுக்கு.
பழியோடு பாவமும் வந்து சேரும்
பிழையாக நடக்கும் இப் போரளிக்கு

Web Design by The Design Lanka