நபியை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் எழுதிய இந்தியர் துபாயில் கைது » Sri Lanka Muslim

நபியை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் எழுதிய இந்தியர் துபாயில் கைது

dubai

Contributors
author image

World News Editorial Team

முகநூல் முஸ்லிம் மீடியா- 
 தகவல் உதவி : gulfnews.com
இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக துபாயிக்கு வேலைக்கு சென்ற இந்தியர் ஒருவர் பேஸ்புக்கில் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுப்படுத்திய பதிவிட்டவரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 லட்சம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலைசெய்து வருகின்றனர்.
இந்தியாவில் பார்க்கப்படுவது போல் சாதி, மதம் பாராமல் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அந்த நாடுகளில் வெளிநாட்டவர்களுக்கு தொழில் மற்றும் பணி போன்றவற்றில் தாராள வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.
அவ்வாறு அந்த நாட்டு விசா பெற்று வசிக்கும் இந்தியர்கள் மத ரீதியிலான அனுஷ்டானங்களை பூஜைகளை நடத்திக் கொள்ள கிறித்தவ தேவாலயம், இந்து கோவில், சீக்கிய குருத்துவதரா போன்ற மாற்று மதாலயங்கள் (சவுதியை தவிர்த்து) அந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதை அங்கே வசிக்கும் முஸ்லிம் அல்லாத மற்றமத அன்பர்களை கேட்டு தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் பன்றி இறைச்சி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த நாடுகளில் வசிக்கும் முஸ்லிமல்லாத மற்ற மதத்தவருக்காக அந்த இறைச்சி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு (சவுதியை தவிர்த்து) அங்காடிகளில் முஸ்லிமல்லாதவர்களுக்காக என்று அறிவிப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
பிழைப்புக்காக அந்த நாடுகளுக்கு சென்றிருப்பவர்களாக இருப்பினும் அவர்களது மத மற்றும் தனி சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்காமல் உரிமை வழங்கியிருப்பதன் மூலம் அந்த நாட்டு அரசுகளின் சகிப்புத்தன்மையை புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் சிலர் அதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் அந்த நாடுகளின் அலுவல் மதமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தை அந்த நாடுகளில் இருந்து கொண்டே இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுப்படுத்துவதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்துவதுமாக இருந்து வருகின்றனர்..
எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு மக்களின் இன, மொழி, மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க முயலுங்கள்.

Web Design by The Design Lanka