நமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்ப்போம் - அழைப்பு விடுக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ - Sri Lanka Muslim

நமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்ப்போம் – அழைப்பு விடுக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ

Contributors

 

qout35

நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்வதற்கு முனைந்தால் அது தாய் நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகமாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலிகள் இருந்த கால கட்டத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் யுத்தம் முடி வடைந்ததன் பேச்சுவார்த்தையினூடாக மீள பெறப்பட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் கடந்த 4 வருட குறுகிய காலத்துக்குள் யுத்தத்தை முடித்து வட மாகாணத்தில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை குடியமர்த்தி, புனர்வாழ்வளித்து அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது.

பல இராணுவ முகாம்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எந்தவொரு கெடுபிடியுமின்றி சுதந்திரமாக எங்கும் சென்று வரக்கூடிய சூழல் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் ஒன்றின் போது உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுவது சாதாரணமாகும். எனினும் இந்த நாடு குறுகிய காலத்திற்குள் கட்டியெழுபப்பட் டுள்ளது. பல தியாகங்களுக்கு மத்தியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்தை நாம் நிலையான சமதானமாக நிலைபெறச் செய்ய வேண்டும். சமாதானத்திற்கு அநீதி இழைக்க முற்படுவதானது பாரதூரமான குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.(tk)

qout36

Web Design by Srilanka Muslims Web Team