நல்லாட்சிக்கான மாற்றம் -ஆரிப் சம்சுடீன் » Sri Lanka Muslim

நல்லாட்சிக்கான மாற்றம் -ஆரிப் சம்சுடீன்

aarif

Contributors
author image

Press Release

குறிப்பு: மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனினால் இன்று (05.01.2015)
மாலை கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்ட துன்டுப்
பிரசுரத்திலிருந்து

 
இந்நாட்டில் வாழுகின்ற ஏறக்குறைய இரண்டு கோடி 20 இலட்சம் மக்களில் குறிப்பிட்ட தொகையினரைத் தவிர ஏனையோர் நடுத்த வர்க்கத்தினராக உள்ளனர். வாழ்க்கைச் சுமையின் காரணமாக இவர்களின் வாழ்வு வேதனை நிறைந்ததாக மாறிவிட்டது. உழைப்புக்கேற்ற ஊதியமின்றிய வாழ்க்கை இம்மக்களில் காணப்படுகிறது. வாழ்க்கையில்; மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியாத துன்பியல் வாழ்க்கை முறை வாழ்வில் தொடர்கிறது. இதற்;குக் காரணம் என்ன?
மஹிந்த அரசாங்கம்

 

இந்த அரசாங்கத்தில் ஊழல், இலட்சம,; மோசடி என்றுமில்லாத வகையில் அதிகரித்துவிட்டது. கொள்ளை, கொலை, துஷ்பிரயோகம் கட்டுக்கடங்காது தலைவிரித்தாடுகிறது. வாழ்க்கைச் செலவு மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. அரச ஊழியர்கள் கடனாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளும், மீனவ சமூகம், சிறு கைத்தொழிலாளர்களும்; தங்களின் தொழில்துறையை விருத்தி செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் மறுமலர்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இந்நாட்டின் சொத்துக்கள் தனி நபர்களின் வளர்ச்சிக்காக பதுக்கப்படுகிறது. இந்நாட்டின் வருமானம் தனி நபர்களின் வருமான விருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடையே பணப்பறிமாற்றங்கள் இடம்பெறுவதனால் அன்றாட செலவைக் கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் இந்நாட்டில் வாழும் பெரும்பாலான மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

யுத்தத்திற்காக செலவு செய்யப்பட்ட பணம் யுத்த நிறைவின் பின் மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படாது பாதைகள், பாலங்களின்; அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகிறது என்ற மாயைக்குள் மறைக்கப்பட்டு சூறையாடப்படுகிறது.

 

இத்தனையும் இடம்பெறுவது மாற்றமி;ல்லாத இந்த அரசாங்கத்தின் சர்வதிகார போக்கு என்பதை இந்நாட்டு மக்கள் உணர்ந்து விட்டனர். அதனால் இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த ஒன்று திரண்டு விட்டனர். அதில் நானும் நீங்களும் பங்களிகளாக மாற வேண்டாமா?
மையித்திரியை ஆதரிப்போம்
மாற்றம் என்பது நாம் மாறாத வரையில் மலராது. அந்த மாற்றத்திற்காகவே எனது மாற்றமும் இடம்பெற்றதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தலைமைத்துவத்தின் நிர்ப்பந்தமா? நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையா? என்ற சூழ்நிலை ஏற்பட்டபோது நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கி, நல்லாட்சியை இந்த நாட்டில் ஏற்படுத்த ஒன்றிணைந்துள்ள உங்களோடு இணைந்து, அந்த வழியில் பயணிப்பதற்காக தீர்மானித்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டேன்.

 

நல்லாட்சிக்கான மாற்றம் நோக்கி மக்கள் அலை அலையாக சென்று கொண்டிருக்கiயில் நாம் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என்ற நிலையில் சில அரசியல் தலைமைகள் மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்;து செயற்படுகிறார்கள்.

இந்த அரசாங்கத்தின் சர்வதிகாரப் போக்கின் அவஸ்தைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தமால் தமது சொந்த நலன்களை முன்னுரிமைப் படுத்தி, அதைக் தக்கவைத்துக்கொள்வதற்காக மாயப் பேச்சுக்களால் மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கையில்,
இவற்றை நம்புவதற்கு இந்த முஸ்லிம் சமூகம் மடையர்கள் இல்லை என்பதை எதிர்வரும் 8ஆம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து நிரூபிக்கவுள்ளனர். இந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாம் அவர்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தார்மீக் பொறுப்பாகும். அந்த தார்மீகக் கடமைக்காகவே எனது தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தின் நிர்பந்தங்களைச் செவிமடுக்காது மக்களோடு இணைந்து கொண்டேன்.

 

வாக்குகளின் மூலம் மக்கள் அளித்த ; பொறுப்பை தேசிய காங்கிரஸும் நிறைவேற்ற வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக கட்சியின் தலைமைத்துவத்துடன் எடுத்துரைத்தபோதிலும், கட்சியின் தலைமைத்துவம் தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. அதனால் நான் நல்லாட்சிக்கான மாற்றத்தின் பக்கம் மாறவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது.

 

கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் ஆன்மீக செயற்பாட்டில் இடையூறுகளை விளைவித்தபோது, பள்ளிவாசல்களை உடைத்தபோது, தர்ஹா நகரை அழித்தபோது அவ்வமைப்புகளை தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபையினூடாக வலியுறுத்தினோம். இந்நாட்டில் சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ வேண்டுமாயின்; இவ்வமைப்புக்கள் தடை செய்யப்படுவது அவசியம் என அறிக்கைகளினூடாக கோரிக்கைகளை இந்த அரசாங்கத்திடம் முன்வைத்தோம். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. அவற்றைத் தடை செய்வதற்கான எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அரசாங்கம் அந்நாட்டில் வாழுகின்ற சமூகங்களைப் பாதுகாக்க வேண்டியது சமூகப் பொறுப்பாகும். அதில் தவறிழைக்கப்பட்டது.
இந்நிலையில்தான், இந்நாட்டில் சமதானமும் நல்லாட்சியும் ஏற்படுத்தப்பட வேண்டும்;. அதனை ஏற்படுத்துவதற்காக தனது உயிரையும் துச்சமென மதித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ள பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இந்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அவரின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 

அந்தவகையில், கடும்போக்காளர்களின், பேரினவாதிகளின் செயற்பாடுகளினால் புண்பட்டுள்ள நமது முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் ஏற்பட வேண்டுமாயின் எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரிபாலவின் வெற்றிச் சின்னமான அன்னம் சின்னத்திற்கு வாக்களிப்பது நமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

 

அதனை உணர்ந்து நல்லாட்சிக்கு வித்திட நமது ஒரு வாக்குக் கூட வீணாகாது எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை ஆட்சி மாற்றத்திற்காக வல்ல அல்லாஹ்வை பிரார்த்தித்தவர்களாக வாக்குக் சாவடிகளுக்குச் சென்று அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அன்புள்ளம் கொண்ட வாக்காளர்களிடம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்

அல் -ஹாஜ் ஆரிப் சம்சுடீன்
சட்டத்தரணி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

 

Web Design by The Design Lanka